பதிவு செய்த நாள்
23 பிப்2018
02:29

புதுடில்லி, பிப். 23–‘‘வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் போது, பிணைக்கு பதிலாக, ஜி.எஸ்.டி., பரிவர்த்தனை விபரங்களை ஏற்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது,’’ என, ‘இன்போசிஸ்’ செயல்சாரா தலைவர், நந்தன் நிலேகனி தெரிவித்து உள்ளார்.டில்லியில், இந்திய நிர்வாகக் கூட்டமைப்பு விழாவில், அவர் பேசியதாவது:தற்போது, ஒரு நிறுவனத்தின் வணிக விபரங்கள் அனைத்தும், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலில் அடங்கி விடுகிறது. இனி, இந்த விபரங்கள் தான், ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நுகர்வோருக்கோ, பிணையின்றி கடன் வழங்கலாமா, கூடாதா என்பதை தீர்மானிக்க, வங்கிகளுக்கு உதவப் போகின்றன.இந்தியாவில், முதன்முறையாக, இந்த நடைமுறை அறிமுகமாக உள்ளது.தற்போது, 1 கோடி நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,திட்டத்தின் கீழ் உள்ளன.இவை, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் விபரங்களை, வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவதற்கு பயன்படுத்தலாம்.மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,கணக்கு தாக்கல் நடைமுறையை, மேலும் சுலபமாக்க உள்ளது. அதனால்,இனி வர்த்தக நடைமுறையில், ஓர் அங்கமாகவே, கணக்கு தாக்கல் மாறிவிடும்.ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், ஒரு நிறுவனம்அளிக்கும் விலைப்பட்டியல் விபரங்களின்படி, தன்னிச்சையாகவே, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் தயாராகி விடும். இந்த புதிய, எளிமையான கணக்கு தாக்கல்நடைமுறை, ஏப்.,முதல் அமலுக்கு வருகிறது. வர்த்தகர்களும், நிறுவனங்களும், புதிய நடைமுறைக்கு மாற, அரசு அவகாசம் அளிக்கும்.இந்த நடைமுறையில், நிறுவனங்கள் மட்டுமின்றி, நுகர்வோரும் பயன் பெறுவர். நுகர்வோர் செலுத்தும், ஜி.எஸ்.டி., தொடர்பான விபரங்களின்படி, அவர்களுக்கு, வங்கிகள், நிதி நிறுவனங்கள் பிணையின்றி கடன் வழங்கும். அது போல, பொருட்களை விற்கும் நிறுவனங்களும், ஜி.எஸ்.டி., விபரங்களின்படி, பிணையின்றி கடன் பெறலாம்.சொத்துகள் எதுவும் இல்லையென்றாலும், ஒரு நிறுவனம் அல்லது நுகர்வோரின், ஜி.எஸ்.டி.,விபரங்களே, கடனுக்கான தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.இதன் மூலம், குறு, சிறு நிறுவனங்கள் அதிகளவில் பயனடையும்; நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். மொத்தத்தில், எதிர்கால வர்த்தகம், உங்கள் தரவுகளை பயன்படுத்தி, உங்களுக்கே பொருட்களை விற்பதாக இருக்காது. மாறாக, உங்கள் தரவுகளை பயன்படுத்தி, நீங்களே உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ரொக்கம் குறைவான சமூகம்இந்தியாவில், ‘கிரெடிட் கார்டு’ பயன்பாடு, குறிப்பிட்ட இலக்கை எட்ட, 18 ஆண்டுகள் ஆனது. இந்த இலக்கை, யு.பி.ஐ., எனப்படும், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனையில், 18 மாதங்களில் எட்டி விட்டது. ஒரு மாதத்தில், ‘யு.பி.ஐ.,’ சார்ந்த பணப் பரிவர்த்தனைகள், 1 கோடியாக, டிசம்பரில் உயரும். இந்தியா, ரொக்கப் பயன்பாடு குறைவான சமூகத்தை நோக்கி செல்கிறது.நந்தன் நிலேகனி செயல்சாரா தலைவர், ‘இன்போசிஸ்’
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|