பதிவு செய்த நாள்
23 பிப்2018
10:04

மும்பை : நேற்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,23) சரிவிலிருந்து மீண்டுள்ளன. வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே நிப்டி மீண்டும் 10,400 புள்ளிகளை கடந்து, வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஆசிய பங்குகள் ஏற்றமடைந்ததாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வுடன் காணப்படுவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 98.71 புள்ளிகள் உயர்ந்து 33,918.21 புள்ளிகளாகவும், நிப்டி 10,419.10 புள்ளிகளாகவும் இருந்தன.
அனைத்து துறை பங்குகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. குறிப்பாக ரூபாய் மதிப்பு உயர துவங்கியதை அடுத்து வங்கி மற்றும் நிதித்துறை பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|