பதிவு செய்த நாள்
23 பிப்2018
14:57

பெங்களூரு : இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்பிஐஎஸ்யு) நடத்திய கணக்கெடுப்பின்படி, தங்கம் மற்றும் வைர வியாபாரம் செய்வதாக கூறி வங்கிகளிடம் பெற்ற கடன்தொகையை திருப்பி செலுத்தாமல் அதிக கடன் பாக்கி வைத்துள்ளவர்கள் 90 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி நகை வியாபாரிகளிடம் வங்கிகள் ரூ.5000 கோடி அளவிற்கு பறிகொடுத்துள்ளன.
இந்த வங்கிகளில் முதலிடத்தில் இருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வங்கி வெறும் 9 பேரிடம் ரூ.1790 கோடிகளை இழந்துள்ளது. இது எஸ்பிஐ இழந்த தொகையை விட 4 மடங்கு அதிகமாகும். எஸ்பிஐ வங்கி 15 மோசடி நகை வியாபாரிகளிடம் ரூ.410 கோடிகளை இழந்துள்ளது. வங்கிகள் இழந்த இந்த ரூ.5000 கோடியில் சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஊழல் தொகை சேர்க்கப்படவில்லை என வங்கி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறியது முதல் பெரிய வரை திருப்பிச் செலுத்தப்படாத கடன் பாக்கிகள் வின்சம், பியூட்டிஃபுல் டைமண்ட்ஸ், ஆரோ கோல்டு ஜூவல்லரி போன்ற பல நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் பல வங்கிகளில் இது போன்று கடன் பாக்கி வைத்துள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடன் பாக்கியை வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகளை வங்கிகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|