பதிவு செய்த நாள்
23 பிப்2018
15:15

புதுடில்லி : இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு குறித்து ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்றதாழ்வுகள் அதிகரித்து விட்டன. இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு, நாட்டின் 15 சதவீதம் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) க்கு சமம். இதனால் ஏழை மேலும் ஏழை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
2017 ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்தியாவில் 101 க்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் உள்ளனர். "பரவலான இடைவெளிகள்: இந்தியாவின் சமத்துவமின்மை அறிக்கை 2018 " என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதில் வருமானம், சொத்து மதிப்பு, செலவிடும் தொகை உள்ளிட்ட அனைத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்படி உலகின் சமத்துவமின்மை அதிகம் காணப்படும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ல் இந்தியாவில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரு சதவீதம், அதாவது ரூ.20.9 டிரில்லியன் அதிகரித்துள்ளது. அதே சமயம் 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பும் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|