பருத்தி விலை சரிவால் ஜவுளி துறைக்கு லாபம்பருத்தி விலை சரிவால் ஜவுளி துறைக்கு லாபம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ...
பொது துறை வங்கிகள் 2 அல்லது 3 போதும்: ‘பிக்கி’ அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2018
00:44

புதுடில்லி : ‘பொதுத் துறை­யில், இரண்டு அல்­லது மூன்று வங்­கி­களை தவிர்த்து, எஞ்­சி­ய­வற்றை, தனி­யார் மய­மாக்க வேண்­டும்’ என, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான, ‘பிக்கி’ மத்­திய அர­சி­டம் கோரிக்கை வைத்­துள்­ளது.

சமீ­பத்­தில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், 11,400 கோடி ரூபாய் மோசடி வெளி­யா­னது. நாட்­டையே உலுக்­கிய இந்த மோச­டிக்கு கார­ண­மான, தொழி­ல­தி­பர் நிரவ் மோடி, குடும்­பத்­து­டன் வெளி­நாட்­டிற்கு தப்பி ஓடி­விட்­டார். இதை­ய­டுத்து, அவர் நிறு­வ­னங்­க­ளுக்­குச் சொந்­த­மான, 5,100 கோடி ரூபாய் சொத்­து­களை, அம­லாக்­கத் துறை முடக்கி உள்­ளது. மேலும், பல சொத்­து­களை கண்­டு­பி­டித்து, முடக்­கும் பணி நடக்­கிறது.

இந்­நி­லை­யில், மோசடி தொகையை திரும்­பச் செலுத்­தும் வழி­களை ஆரா­யு­மாறு, நிரவ் மோடிக்கு, பஞ்­சாப் நேஷ­னல் வங்கி கடி­தம் அனுப்பி உள்­ளது. ஆனால் அவரோ, ‘மோசடி தொகை, மிகைப்­ப­டுத்தி கூறப்­பட்­டுள்­ளது; 5,000 கோடி ரூபாய்க்­குள் தான், நான் செலுத்த வேண்­டி­யது இருக்­கும்’ என, கூறி­யுள்­ளார். ஆகவே, மோசடி தொகை­யில், மேலும் பல­ருக்கு உள்ள தொடர்பு, விரை­வில் தெரிய வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


இந்­நி­லை­யில், பஞ்­சாப் நேஷ­னல் வங்­கியை போல, கடன் பொறுப்­பேற்பு கடி­தங்­கள் மூலம் மோசடி நடை­பெற்று உள்­ளதா என்ற ஆய்வை, வங்­கித் துறை மேற்­கொண்டு உள்­ளது. ஏற்­க­னவே, 9.46 லட்­சம் கோடி ரூபாய் வாராக்­க­டன் பிரச்­னை­யில் சிக்கி உள்ள வங்­கித் துறைக்கு, மோசடி விவ­கா­ரம் பெரும் தலை­வ­லி­யாக உரு­வெ­டுத்து உள்­ளது. இது போன்ற மோச­டி­களை தடுக்­க­வும், வங்கி நிர்­வா­கத்தை திறம்­பட மேற்­கொள்­ள­வும், பொதுத் துறை வங்­கி­களில், மத்­திய அர­சின் பங்கு மூல­த­னத்தை, 50 சத­வீ­தத்­திற்­கும் கீழாக குறைக்க வேண்­டும் என, சமீ­பத்­தில், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­பான, ‘அசோ­செம்’ தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், ‘பிக்கி’ தலை­வர், ராஷேஷ் ஷா, நேற்று, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்­லியை சந்­தித்து, பொதுத் துறை வங்­கி­களை தனி­யார்­ம­ய­மாக்­கு­வது குறித்து பேசி­னார்.

இது குறித்து, ‘பிக்கி’ அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­களில், இரண்டு அல்­லது மூன்று வங்­கி­களை மட்­டும் வைத்து, மற்­ற­வற்றை, படிப்­ப­டி­யாக தனி­யார் மய­மாக்க வேண்­டும் என, அருண் ஜெட்­லி­யி­டம், ராஷேஷ் ஷா வலி­யு­றுத்­தி­னார். பொதுத் துறை வங்­கி­களின் பிரச்­னை­கள், மிக ஆழ­மா­னவை. அவற்­றுக்கு, மத்­திய அரசு அளிக்­கும், 2.11 லட்­சம் கோடி ரூபாய் மறு பங்கு மூல­தன திட்­டத்­தில் கூட, தீர்வு காண முடி­யாது. ஆகவே, சிறந்த நிர்­வா­கம் மற்­றும் பொறுப்­பு­ணர்­வு­டன், குறை­வான வாராக்­க­ட­னில் செயல்­படும், தனி­யார் வங்­கி­களை போல, பொதுத் துறை வங்­கி­களை மாற்ற வேண்­டி­யது அவ­சி­யம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

வரவேற்பு:
தனி­யார் வங்­கி­களில், மோச­டி­கள் மிகக் குறை­வாக உள்ளன. அத­னால், பொதுத் துறை வங்­கி­களை, தனி­யார் மய­மாக்­கும் திட்­டத்தை, நான் வர­வேற்­கி­றேன்.
-அதி கோத்ரெஜ், தலைவர், கோத்ரெஜ் குழுமம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)