ரோல்ஸ் ராய்ஸ்: 8வது தலை­முறை, ‘பேன்­டம்’ அறி­மு­கம்ரோல்ஸ் ராய்ஸ்: 8வது தலை­முறை, ‘பேன்­டம்’ அறி­மு­கம் ... ஏப்., 1 முதல் மீண்டும் ‘இ – வே’ ரசீது அறிமுகம் ஏப்., 1 முதல் மீண்டும் ‘இ – வே’ ரசீது அறிமுகம் ...
படிக்காதவரை விட படித்தோர் அதிகம் வேலையின்றி உள்ளனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2018
04:31

மும்பை, : இந்­தி­யா­வில், படிக்­கா­தோரை விட படித்த இளைஞர்­கள் தான், அதி­கள­வில் வேலை­யின்றி உள்ள­தாக, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது.இது குறித்து, சமூ­கம் மற்­றும் பொரு­ளா­தார மாற்ற மைய துணை பேராசி­ரி­யர், இந்­தி­ர­ஜித் பைராக்­கியா வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:படிக்­காத இளை­ஞர்­களை விட, படித்த இளைஞர்­க­ளி­டையே தான், வேலை­யின்மை அதி­க­மாக உள்­ளது.இது, அவர்­கள் கற்ற கல்­விக்­கேற்ப உயர்ந்து வரு­கிறது.எனி­னும், அத்­த­கை­யோ­ருக்கு ஏற்ற ஊதி­யத்­தில் வேலை கிடைக்­கா­மல் உள்­ள­தை­யும் மறுப்­ப­தற்கு இல்லை.வழக்­க­மான பணி வாய்ப்­பு­கள், ஒரு வரை­ய­றைக்கு உட்­பட்ட அள­விற்கே உள்ள போதி­லும், படித்த இளை­ஞர்­கள் அவற்றையே நாடி, பிற பணி­களை தவிர்க்­கின்­றனர்.இந்த போக்கு, வளர்ச்சி அடைந்த மாநி­லங்­களில் அதி­க­மாக உள்­ளது. அங்­குள்ள வேலை­வாய்ப்­பு­களை விட, படித்­தோர் அதி­க­மாக உள்­ள­தால், போட்டி கார­ண­மாக, வேலை­யில்லா திண்­டாட்­ட­மும் பெருகி உள்­ளது.பெரிய குடும்­பங்­களில், படித்த வேலை­யற்­றோர் அதி­கம் உள்­ள­னர். குடும்ப பாரம் இல்­லா­த­தால், அவர்­கள் நல்ல வேலையை எதிர்­பார்த்து, கிடைக்­கும் வேலை­யில் அம­ரா­மல் காலம் கடத்­து­கின்­ற­னர்.நடுத்­தர வய­தி­னரை விட, படித்த மற்­றும் படிக்­காத இளை­ஞர்­க­ளி­டையே, வேலை­யில்லா திண்­டாட்­டம் அதி­க­மாக உள்­ளது.தொழிற்­ப­யிற்சி பெற்ற, படித்த மற்­றும் படிக்­கா­தோ­ருக்கு, அமைப்பு சார்ந்த அல்­லது சாராத துறை­களில் வேலை­வாய்ப்பு கிடைக்­கிறது.இளை­ஞர்­க­ளி­டம், தொழில்­நுட்­பம் மற்­றும் தொழிற்­ப­யிற்சி திறனை அதி­க­ரிக்க, தீவி­ர­மான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அவ்­வாறு செய்­தால், படித்­தோர் மற்­றும் படிக்­கா­தோ­ரின் வேலை­யில்லா திண்­டாட்­டத்தை குறைக்க முடி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கோல்­கட்டா,: நாட்­டின் மிகப்­பெ­ரிய, ‘டிவி’ விற்­ப­னை­யா­ள­ரான, ‘சாம்­சங்’ நிறு­வ­னம், வெளி­நாட்­டி­லி­ருந்து ... மேலும்
business news
மும்பை:நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதியை, 2025ம் ஆண்டில், 5.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பதற்கான பட்ஜெட் ... மேலும்
business news
குவஹாத்தி:கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், குவஹாத்தி தேயிலை ஏல மையமான, ஜி.டி.ஏ.சி., நேற்று சிறப்பு ... மேலும்
business news
புது­டில்லி, :ஓட்­டல் மற்­றும் உண­வ­கங்­கள் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, எப்.எச்.ஆர்.ஏ.ஐ., தங்­கள் துறைக்­கென ... மேலும்
business news
புது­டில்லி:அஞ்­சல் துறை மூல­மாக நடை­பெ­றும் ஏற்­று­மதி தொடர்­பான சுங்க தக­வல்­களை, பரி­மா­றிக் கொள்­வ­தற்­கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)