பதிவு செய்த நாள்
26 பிப்2018
04:45
குறித்த காலத்தில் பிரீமியம் தொகையை செலுத்த தவறினால், ஆயுள் காப்பீடு பாலிசிகள் காலாவதியாகி விடலாம். இதனால் அவை அளிக்க கூடிய பாதுகாப்பும் இல்லாமல் போகலாம். இப்படி காலாவதியான பாலிசிகளை, நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் மூலம் புதுப்பித்துக் கொள்வது சாத்தியமே.பாலிசிகள் காலாவதியான பின் புதுப்பிக்கப்படுவதற்கு என, குறிப்பிட்ட காலக்கெடு இருக்கிறது. அந்த கெடு தவறவில்லை எனில் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த கால அவகாசத்தை காப்பீட்டு நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டிருக்கும். புதுப்பிப்பதற்கான தகுதி பாலிசியின் தன்மைக்கேற்பவும் அமையும்.பாலிசியை புதுப்பிக்க விரும்பும் நபர், தொடர்புடைய காப்பீடு நிறுவன கிளையை அணுகி, இதற்கு தேவையான விபரங்களை கோர வேண்டும். பாலிசியை புதுப்பிக்க செலுத்த வேண்டிய தொகை பற்றிய தகவல் தெரிவிக்கப்படும். அனேகமாக இது நிலுவையில் உள்ள பிரீமியம் தொகையாக இருக்கலாம்.பாலிசிதாரர் வயது மற்றும் பாலிசி தொகைக்கு ஏற்ப மருத்துவ சான்றிதழ் அளிக்கும் அவசியமும் ஏற்படலாம். பாலிசியை புதுப்பிக்க நிலுவைத் தொகை மற்றும் அதற்கான வட்டியை செலுத்த வேண்டும். இதற்கான அபராத கட்டணமும் விதிக்கப்படலாம்.காப்பீடு நிறுவனங்கள், பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பை அளிப்பதற்கான சிறப்பு முகாம்களையும் அடிக்கடி நடத்துகின்றன. இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய முகாம்களில் அபராத கட்டணச் சலுகையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதுப்பித்தலுக்கான நிபந்தனைகள் மற்றும் நெறிமுறைகள் நிறுவனங்களிடையே மாறுபடலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|