பதிவு செய்த நாள்
26 பிப்2018
04:47

பொதுவாக ஓய்வு காலத்தின் போது நிலையான வருமானம் தேவை எனும் அடிப்படையில், பலரும் இத்தகைய வருமானத்தை மனதில் கொண்டு முதலீடு செய்வது உண்டு. ஆனால் நிலையான வருமானத்தின் தேவை ஓய்வு காலத்தில் மட்டும் வருவதல்ல. பணி புரியும் காலத்திலேயே பலவித காரணங்களுக்காக முதலீடுகள் மூலம் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கலாம். உதாரணத்திற்கு பிள்ளைகள் கல்வி இலக்கை நிறைவேற்ற, வீட்டுக்கடன் தவணையை அடைக்க, சுற்றுலா பயணம் மேற்கொள்ள என, பலவித நோக்கங்களுக்காக முதலீடு மூலம் வருமானத்தை நாடலாம். வட்டி வருமானம் அளிக்க கூடிய வங்கி மற்றும் வர்த்தக வைப்பு நிதிகள், கடன் பத்திரங்கள், அரசின் வருமான திட்டங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் கடன்சார் திட்டங்கள் உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகள் இந்த நோக்கத்தில் கைகொடுக்கும். இவற்றில் பொருத்தமான சாதனங்களை தேர்வு செய்வதோடு, அவை மூலமான வருமானத்தை பெறுவதற்கு ஏற்ற உத்தியும் வகுத்திருக்க வேண்டும்.நீண்ட கால முதலீடுநிலையான வருமானம் பெற எளிய வழி, அதிக வட்டி அளிக்கும் பத்திரங்களில் அதிக ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாகும். இடையே வட்டி விகிதம் குறைந்தாலும் பாதிப்பு இருக்காது. ஆனால் இப்படி பத்திரங்களில் பணத்தை போடுவதற்கு முன் உடனடித் தேவைகள் மற்றும் அவசர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, போதுமான நிதி இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. பத்திரங்களில் முதலீடு செய்யும் போது, முதிர்வு காலத்திற்கு முன் அசல் கிடைக்க வாய்ப்பில்லை. சந்தையில் விற்கும் நிலை ஏற்பட்டால், நஷ்டத்தில் விற்கும் சூழலும் வரலாம். பொதுவாக, வருமானம் தேவைப்படும் காலத்திற்கு ஏற்ப முதலீட்டு காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.ஒரு சில பத்திரங்கள் ரேட்டிங் குறைவாக இருந்தாலும் அதிக வட்டி அளிக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றையும் பரிசீலிக்கலாம்.அதே போல, முதலீடுகளின் முதிர்வு காலத்தையும் திட்டமிடலாம். ஒரே நேரத்தில் எல்லா முதலீடுகளும் முதிர்வடைவது போல் இருப்பதை விட, படிப்படியாக ஒவ்வொரு முதலீடும் ஒவ்வொரு கட்டமாக முதிர்வடையும் வகையில் முதலீடு செய்வது நல்ல பலன் அளிக்கும். வட்டி விகிதம் குறைந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும். கடன்சார் முதலீடுகள்சமபங்குகள் அளிக்கும் டிவிடெண்ட் மற்றும் வாடகை வருமானம் ஆகியவையும் நிலையான வருமானம் அளிக்கும். எனவே கடன்சார் முதலீடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியதில்லை. பங்குகள் மீதான டிவிடெண்டிற்கு உத்தரவாதம் இல்லை என்றாலும் இவை நல்ல வாய்ப்பாகும். நல்ல வருவாய் அளிக்கும் பங்குகளாக தேர்வு செய்து முதலீடு செய்யலாம். வாடகை வருமானம் தேவை எனில் அதற்கேற்ப திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். வட்டி வருமானம் தவிர, முதலீட்டை விற்பதன் மூலமான வருமானத்திலும் கவனம் செலுத்தலாம். அதாவது முதலீட்டை பொருத்தமான காலத்தில் விற்று வெளியேறுவதன் மூலம் பலன் பெறலாம். இதற்கான இலக்கை முதலிலேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த காலம் வந்ததும், கையில் உள்ள பங்கு அல்லது தங்கத்தை விற்று லாபம் பார்க்கலாம். ஆனால் வருவாய் தேவைப்படும் அளவிற்கு மட்டுமே விற்க வேண்டும். முதலீட்டு உத்திகள் ஒருவரின் நிதி சூழல் மற்றும் வயதிற்கேற்ப மாறுபடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|