பதிவு செய்த நாள்
27 பிப்2018
01:09

மும்பை : மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீட்டில் உள்ள, 30 நிறுவனங்களின் பங்குகள் மீதான பரிவர்த்தனை கட்டணம், ரத்தாகிறது.இந்த திட்டம், மார்ச் 12 முதல் அமலுக்கு வருவதாக, மும்பை பங்குச் சந்தை தெரிவித்து உள்ளது.இந்திய பொருளாதாரத்தின் அளவுகோலாக, ‘சென்செக்ஸ்’ விளங்குகிறது. இதில், பரிவர்த்தனை கட்டணத்தை ரத்து செய்வதன் மூலம், அதிகமானோர், இக்குறியீட்டில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவர்.குறிப்பாக, சில்லரை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இச்சலுகை வழங்கப்படுவதாக, மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.இச்சந்தை, நிறுவனங்களின் வர்த்தகம், சந்தை மதிப்பு, பங்கு பரிவர்த்தனை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், அவற்றை, ‘ஏ – பி – டி’ என, பிரித்துள்ளது. இதில், அதிகமானோர் பரிவர்த்தனை மேற்கொள்ளும், ‘ஏ’ பிரிவில், 300 நிறுவன பங்குகள் அடங்கியுள்ளன.தற்போது, இப்பிரிவுகளில், ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணம், 0.50 – 1.50 ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|