பதிவு செய்த நாள்
27 பிப்2018
01:10

புதுடில்லி, : விமான பயணியருக்கு, மொபைல் போனில், அதி விரைவான, ‘டேட்டா’ இணைப்பு வசதி அளிக்க, சர்வதேச குழுமமான, ‘சீம்லெஸ் அலையன்ஸ்’ உடன், ‘பார்தி ஏர்டெல்’ இணைந்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:விமான பயணியர், டேட்டா எனப்படும் தரவு களை அதிவிரைவாக பரிமாறிக் கொள்ள, சர்வதேச நிறுவனமான, சீம்லெஸ் அலையன்ஸ் உடன், பார்தி ஏர்டெல் இணைந்துள்ளது. ஏற்கனவே, ஒன்வெப், ஏர்பஸ், டெல்டா மற்றும் ஸ்பிரின்ட் நிறுவனங்கள் இணைந்துள்ளன.சீம்லெஸ் அலையன்ஸ், மொபைல் போனில் டேட்டா எனப்படும் தரவுகளை, விமான பயணத்தில் மேற்கொள்ளும் வசதியை வழங்கும்.இதன் மூலம், ஏர்டெல் சந்தாதாரர்கள், விமான பயணத்தின் போது கூட, விரைவான தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட முடியும்.உலகளவில், மொபைல் போன் சேவை வழங்குவதில், பார்தி ஏர்டெல் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த, 16 நாடுகளில், மொபைல் போன் சேவை வழங்கி வருகிறது. விமானத்தில் மொபைல் போன் சேவை துவக்கம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|