பதிவு செய்த நாள்
27 பிப்2018
01:10

புதுடில்லி : ‘நடப்பு, 2017 --– 18ம் நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான மூன்றாம் காலாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதமாக வளர்ச்சி கண்டிருக்கும்’ என, மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய பொருளாதாரம், மந்தநிலை நீங்கி, வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், தொழில் மற்றும் சேவைகள் துறையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், வேளாண் துறை வளர்ச்சி குறைந்திருக்கும் என, தெரிகிறது. இரு சக்கர வாகன விற்பனை நன்கு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த வாகன துறையின் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.சரக்கு ஏற்றுமதி வளர்ச்சி, இரட்டை இலக்கத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்ற காரணங்களால், அக்., – டிச., காலாண்டில், ஜி.டி.பி., 7 சதவீதமாக வளர்ச்சி கண்டிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, முந்தைய, ஜூலை – செப்., காலாண்டில், 6.3 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், ஜி.வி.ஏ., எனப்படும் மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, 6.1 சதவீதத்தில் இருந்து, 6.7 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., 5.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. அதன் பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடு பிடித்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|