பதிவு செய்த நாள்
27 பிப்2018
01:11

புதுடில்லி : வங்கி சாரா நிதி துறையில், இடர்ப்பாடு உள்ளவையாக, 9,500 நிறுவனங்களை, மத்திய நிதி புலனாய்வு பிரிவு அடையாளம் கண்டுள்ளது.இந்நிறுவனங்கள், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்ட விதிகளை பின்பற்றாமல் உள்ளன.பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, வங்கி சாரா நிதி நிறுவனங்களும், கூட்டுறவு வங்கிகளும், 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை பெருமளவு மாற்றியது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையை மீறி, ரொக்க டெபாசிட் பெற்றுள்ளன. அத்துடன், பின்தேதியிட்ட குறித்த கால வைப்பு தொகை மற்றும் காசோலைகளை வழங்கியுள்ளன.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஒரு முதன்மை அதிகாரியை நியமிக்க வேண்டும்.அத்துடன், சந்தேகத்திற்கு இடமான மற்றும், 10 லட்சம் ரூபாய் அளவிற்கான ரொக்க பரிவர்த்தனைகளை, நிதி புலனாய்வு பிரிவிற்கு தெரிவிக்க வேண்டும்.‘இதை, இடர்ப்பாட்டு நிறுவனங்கள் பின்பற்றத் தவறியதால், ஒவ்வொரு விதிமீறலுக்கும், 10 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்’ என, நிதி புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|