பதிவு செய்த நாள்
27 பிப்2018
01:12

புதுடில்லி : வரும் மாதங்களில், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இரண்டு டஜனுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயாராக உள்ளன.இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் திரட்டும் நிதியை, அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளதாக, ‘செபி’யிடம் அளித்துள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாய்ப்புகள்ஒரு சில நிறுவனங்கள், பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெறுவதன் மூலம், ‘பிராண்டு’ மதிப்பை உயர்த்திக் கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன் மூலம், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன.ஒரு சில நிறுவனங்கள், தற்போதுள்ள முதலீட்டாளர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில், பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள உள்ளன. இந்நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்றால், முதலீடுகளை திரும்பப் பெறும் வாய்ப்பும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, சந்தையாளர்கள் கூறியதாவது:பங்குச் சந்தையின் எழுச்சியும், அதைத் தொடர்ந்து, பங்குகளில் முதலீடு செய்ய வருவோரின் ஆர்வமும், பல நிறுவனங்களுக்கு, பங்கு வெளியீட்டில் களமிறங்கும் துணிவை அளித்துள்ளன.பார்பிக்யு நேஷன் ஆஸ்பிடாலிட்டி, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், பாரத் டைனமிக்ஸ் மற்றும் இந்தியன் ரினீபவிள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜன்சி ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு, செபி ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.இவை தவிர, பந்தன் பேங்க், இன்தோஸ்டார் கேப்பிடல் பைனான்ஸ், ரைடெஸ், மிஷ்ரு தத்து நிகாம், நசாரா டெக்னாலஜிஸ், ரூட் மொபைல் ஆகிய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கு செபியின் அனுமதி கோரி காத்திருக்கின்றன.காத்திருப்புபங்கு வெளியீட்டில் இறங்க உள்ள நிறுவனங்கள், செபியிடம் அளித்துள்ள ஆவணங்களின் படி, அவை, 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.ஏற்கனவே, நியூஜென் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ், ஆம்பர் என்டர்பிரைசஸ் இந்தியா உள்ளிட்ட, ஐந்து நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு உள்ளன.ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி காத்திருக்கின்றன.மேலும் பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கு ஆயத்தமாகி வருகின்றன. ஏப்ரல் முதல், புதிய பங்கு வெளியீடுகள் அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய உச்சம்கடந்த, 2017, பங்கு வெளியீட்டிற்கு மிகச் சிறந்த ஆண்டாக விளங்கியது. மொத்தம், 36 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 67 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன. புதிய பங்கு வெளியீடுகளில் இது, உச்சமாகும். இதற்கு முன், 2010ல், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், அதிகபட்சமாக, 37 ஆயிரத்து, 535 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே சாதனையாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|