பதிவு செய்த நாள்
27 பிப்2018
17:03

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல். இந்நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு ஓரியா என்ற தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்க உள்ளது. முதற்கட்டமாக, லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் செல்போன்கள் இந்த வகை போன்களை தயாரிக்க முன்வந்துள்ளன.
இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ போன் 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. குறைந்த இன்டர்நெட் டேட்டாவில் இன்டெர்நெட் சேவையை விரைவாக செயல்படும் வகையில் இந்த போன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ஜிபி ரேம் அல்லது அதற்கும் குறைவான போனில் இதை பயன்படுத்த முடியும். இந்தியாவில் தான் முதன்முதலில் ஆண்ட்ராய்டு ஓரியா தளத்தில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|