பதிவு செய்த நாள்
02 மார்2018
00:03

புதுடில்லி:‘வரும் நிதியாண்டில், கட்டுமான துறையின் வருவாய் வளர்ச்சி அதிகரிக்கும்’ என, தர மதிப்பீட்டு நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:வரும், 2018- – 19ம் நிதியாண்டில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இது, கட்டுமான துறையின் வருவாய் வளர்ச்சிக்கு உதவும். கட்டுமான நிறுவனங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அவற்றின் வரிக்கு பிந்தைய வருவாய் உயரும்.
அதனால், இத்துறைக்கான ஸ்திரத்தன்மை குறியீடு, 2019- – 20ம் நிதியாண்டில், மேலும் உயர வாய்ப்பு உள்ளது.கட்டுமான நிறுவனங்களுக்கு, வரும் நிதியாண்டில் அதிக அளவிலான, ‘ஆர்டர்’கள் கிடைக்கும். அவற்றில், போக்குவரத்து துறை முதலிடம் பிடிக்கும். அடுத்து, பொறியியல்,சாலைகள் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்புக்கான கட்டுமான ஒப்பந்தங்கள் அதிகம் கிடைக்கும்.ஜி.எஸ்.டி., அமலாக்கம் காரணமாக, நடப்பு நிதியாண்டில், கட்டுமான துறையின் லாப வரம்பும், பணப்புழக்கமும் குறைந்து இருந்தன.
ஆனால், அடுத்த நிதியாண்டில், இத்துறையின் லாப வரம்பு அதிகரிக்கும். கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம், பணப்புழக்கம் பெருகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, கட்டுமான நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும். அவை, விரிவாக்கத் திட்டங்களில் களமிறங்கும். கட்டுமான துறையில், ஒருசில நிறுவனங்களின் கடன் பொறுப்பு, தர நிர்ணய வரம்பின் விளிம்பில் உள்ளதால், அவற்றால் பாதிப்புகளை
சமாளிக்க முடியும்.
இது போன்ற அம்சங்கள் காரணமாக, கட்டுமான துறைக்கான ஸ்திரத்தன்மை மதிப்பீடு நீடிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|