பதிவு செய்த நாள்
02 மார்2018
00:09

புதுடில்லி:மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிறுவனத்தின் மொத்த கார்கள் விற்பனை, பிப்ரவரியில், 15 சதவீதம் அதிகரித்து, 1,49,824 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1,30,280 ஆக இருந்தது.இதே காலத்தில், உள்நாட்டு வாகன விற்பனை, 14.2 சதவீதம் உயர்ந்து, 1,20,735லிருந்து, 1,37,900 ஆக அதிகரித்துள்ளது. சிறிய வகை ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார்கள் விற்பனை, 2.1 சதவீதம் அதிகரித்து, 33,789 ஆக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், காம்பேக்ட் பிரிவைச் சேர்ந்த, சுவிப்ட், எஸ்டிலோ, டிசையர், பலேனோ ஆகிய கார்கள் விற்பனை, 38.7 சதவீதம் ஏற்றம் கண்டு, 65,213 ஆக உள்ளது.பயன்பாட்டு வாகனங்களான, எர்டிகா, எஸ் – கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்கள் விற்பனை,
பிப்ரவரியில், 13.8 சதவீதம் அதிகரித்து, 20,324 ஆக வளர்ச்சியடைந்து உள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 17,863 ஆக இருந்தது.இதேகாலத்தில், ஆம்னி மற்றும் இ – எகோ வேன்களின் விற்பனை, 12.5 சதவீதம் குறைந்து, 12,425 ஆக உள்ளது. நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 9,545 லிருந்து, 11,924 ஆக உயர்ந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|