பதிவு செய்த நாள்
02 மார்2018
00:10

சென்னை:டி.வி.எஸ்., மோட்டார்நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறது.சமீபத்தில் இந்நிறுவனம், சென்னையில், போலீஸ் துணையுடன், பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போலி உதிரி பாகங்களை பறிமுதல் செய்தது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:போலி உதிரி பாகங்கள், வாகனங்களின் ஆயுளை குறைப்பதுடன், வாகன ஓட்டிகளின் ஆயுளுக்கும்ஆபத்தை விளைவிக்கின்றன.
அதனால், ‘பிராண்டு பாதுகாப்பு’ என்ற திட்டத்தின் கீழ், அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில், டி.வி.எஸ்., அசல் உதிரி பாகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட உதிரி பாகங்களின் மொத்த கொள்முதல் முகவர்களை நியமித்து உள்ளோம். வாகன ஓட்டிகள், 4,000 விற்பனை மையங்களில், அசல் உதிரி பாகங்களை வாங்கலாம்.வாடிக்கையாளர்களுக்கு, தரமான உதிரி பாகங்கள் கிடைக்க வேண்டும்; வாகனங்கள் நீண்ட காலம் உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..,
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|