சேவை துறை வளர்ச்சியில் பின்னடைவுசேவை துறை வளர்ச்சியில் பின்னடைவு ... ‘யூப்டிவி’-யில் முத்தரப்பு தொடரை பார்க்கலாம் ‘யூப்டிவி’-யில் முத்தரப்பு தொடரை பார்க்கலாம் ...
பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தபடி:நிதி தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு உயர்மட்ட குழு அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2018
01:04

புதுடில்லி:மத்­திய அரசு, நிதி தொழில்­நுட்பத் துறை பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்­சிக்­கான வழி­மு­றை­களை உரு­வாக்க, உயர்­மட்­டக் குழு ஒன்றை அமைத்­துள்­ளது.
இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மின்­னணு வாயி­லான வர்த்­த­கச் செயல்­பா­டு­கள், பணப் பரி­வர்த்­த­னை­கள் ஆகி­ய­வற்றை கொண்­டுள்ள, நிதி தொழில்­நுட்­பத் துறை­யில், இதர வள­ரும் நாடு­களை விட, இந்­தியா குறிப்­பி­டத்­தக்க வகை­யில் முன்­னேறி வரு­கிறது.இதை­யொட்டி, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி, மத்­திய பட்­ஜெட்­டில், ‘நிதி தொழில்­நுட்­பத் துறையை மேம்­ப­டுத்த, உயர்­மட்­டக் குழு அமைக்­கப்­படும்’ என, தெரி­வித்­தி­ருந்­தார்.அதன்­படி, மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­தின் கீழ் உள்ள, பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் துறை செய­லர் தலை­மை­யில், எட்டு உறுப்­பி­னர்­கள் கொண்ட உயர்­மட்­டக் குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது.
இக்­குழு, உல­க­ள­வி­லும், உள்­நாட்­டி­லும், நிதி தொழில்­நுட்­பத் துறை­யில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­கள் குறித்து ஆராய்ந்து, பொது­வான செய­லாக்க கருத்­து­ருவை உரு­வாக்­கும்.இத்­து­றை­யில், சுல­ப­மாக தொழில் துவங்­கும் வழி­மு­றை­க­ளை­யும், தொழில் முனை­வோரை ஊக்­கு­விப்­ப­தற்­கான கார­ணி­க­ளை­யும் ஆரா­யும்.அத்­து­டன், நிதி தொழில்­நுட்­பத் துறை வளர்ச்­சி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய, பல்­வேறு ஒழுங்­கு­முறை கட்­டுப்­பாட்டு அமைப்­பு­களின் விதி­மு­றை­கள் குறித்­தும் பரி­சீ­லிக்­கும்.இத்­து­றை­யி­னர், அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர், சீனா உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களும் ஆரா­யப்­படும்.
குறைந்த விலை வீடு­கள் திட்­டம், அடித்­தட்டு மக்­க­ளுக்­கும் மின்­னணு சேவை­களை கொண்டு சேர்ப்­பது, நில ஆவண நிர்­வா­கம் மற்­றும் இதர அரசு சேவை­கள், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­தனை வசதி உள்­ளிட்ட பிரி­வு­களில், அதிக கவ­னம் செலுத்­தும்.குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை­யில், எந்த வகை­யில் நிதி தொழில்­நுட்ப சேவை­களை பர­வ­லாக்­கு­வது என்­பது குறித்­தும், இக்­குழு ஆரா­யும்.
இந்­நி­று­வ­னங்­கள் கட­னு­தவி பெறு­வ­தற்­கான, ‘மொபைல் ஆப்’கள் உரு­வாக்­கு­வது ஊக்­கு­விக்­கப்­படும்; இதற்­காக, ஜி.எஸ்.டி.என்., உட­னான தக­வல் தொகுப்பு, கடன் தக­வல் நிறு­வ­னங்­களின் தக­வல்­கள் ஆகி­ய­வற்றை பொது வெளி­யில் பகிர்­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும்.நிதி தொழில்­நுட்ப சேவை துறைக்கு என, தனி நிறு­வன அடை­யாள எண் வழங்­கு­வது குறித்து, தேசிய தனி­ந­பர் அடை­யாள ஆணை­யம் போன்ற அரசு அமைப்­பு­க­ளு­டன் கலந்­தா­லோ­சனை செய்­யப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
எந்தெந்த நிறுவனங்கள்?
நிதி தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், பாரம்­ப­ரிய நிதிச் சேவை­யில் இருந்து மாறு­பட்ட, மின்­னணு தொழில்­நுட்­பம் சார்ந்த செயல்­பா­டு­களை கொண்­டவை. உதா­ர­ண­மாக, மொபைல் போனில், வங்­கிச் சேவை­கள், ‘இ – வாலட்’ எனப்­படும், மின்­னணு பணப் பை வசதி, காப்­பீட்டு வசதி போன்­ற­வற்றை வழங்­கும், ‘பேடி­எம், இட்ஸ்­கேஷ், மொபிக்­விக், பேங்க் பஜார், பாலிசி பஜார்’ போன்ற நிறு­வ­னங்­களை கூற­லாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)