பதிவு செய்த நாள்
07 மார்2018
00:26

மும்பை:அமெரிக்க அரசு, தொழில் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் அமலானால், அமெரிக்காவை பெரிதும்
சார்ந்துள்ள, இந்தியாவின் வைரங்கள் மற்றும் வைர ஆபரணங்கள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கும்.
சமீபத்தில், உருக்கு மற்றும்
அலுமினியம் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும், 10 சதவீதம் சுங்க
வரி விதிக்க உள்ளதாக, அமெரிக்கா தெரிவித்தது. இதற்கு, கனடா,
சீனா, ஜப்பான், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஆகியவை, எதிர்ப்பு
தெரிவித்தன. ‘அமெரிக்காவின் முடிவு, அந்நாட்டிற்கே ஆபத்தாக
முடியும்’ என, பன்னாட்டு நிதியமும் எச்சரித்தது.
ஆனால்,
டொனால்டு டிரம்ப், ‘இறக்குமதி வரியால், சர்வதேச வர்த்தகப் போர்
மூண்டால், அதை சுலபமாக சமாளித்து வெற்றி காண்போம்’ என, கொக்கரித்து
உள்ளார்.இந்நிலையில், தொழில் மற்றும் நுகர்வோர் துறை சார்ந்த
பொருட்களின் இறக்குமதி வரியை, அமெரிக்கா உயர்த்த உள்ளதாக
கூறப்படுகிறது.
இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும்
ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் முன்னாள் தலைவர், பிரவீன்
சங்கர் பாண்டியா கூறியதாவது:டிரம்ப், தங்க ஆபரணங்களுக்கு
இறக்குமதி வரி உயர்த்தப்படும் என, கூறவில்லை. ஆனால், அவர், நாடுகளை
பொறுத்து, சுங்க வரி விதித்தாலோ அல்லது வரியை உயர்த்தினாலோ, அது, 4,000
கோடி டாலர் மதிப்பிலான, இந்திய வைர ஆபரணங்கள் ஏற்றுமதியை
பாதிக்கும்.
தற்போது, இந்தியாவின் ஆபரண ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்கு, 40 சதவீதமாக உள்ளது.வர்த்தக
பயன்பாடு சாராத, ஆபரணமாக பயன்படும், பட்டை தீட்டப் பட்ட
வைரங்களுக்கு, அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. இவ்வகை
வைரங்கள் இறக்குமதிக்கு, அமெரிக்காவில் சுங்க வரி கிடையாது. அதே
சமயம், வைரம் பதித்த தங்க ஆபரணங்கள் இறக்குமதிக்கு, வரி
வசூலிக்கப்படுகிறது.
இந்த வரி உயர்த்தப்பட்டால், இந்திய வைர
ஆபரண ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவர். எந்த நாடும்,
இறக்குமதி வரியை, அந்தந்த நாட்டின் தகுதிப்படி, தீர்மானிக்க
முடியாது.அதனால், இந்தியாவை பாதிக்கக்கூடிய முடிவு எதையும், டிரம்ப் எடுக்க மாட்டார் என, நம்புகிறோம்.
அப்படி எடுத்தால், அது, இந்தியாவின் வைரங்கள் மற்றும் வைரங்களை பட்டை தீட்டும்
தொழிலில் உள்ளோரை பாதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
உலகில் முதலிடம்
சர்வதேச
சந்தைக்கு வரும், 13 கச்சா வைரங்களில், 11 வைரங்களை நறுக்கி, பட்டை
தீட்டி தரும், மிகப்பெரிய நாடாக, இந்தியா விளங்குகிறது.இந்தியா,
2016 -– 17ம் நிதியாண்டில், அமெரிக்காவிற்கு, 736 கோடி டாலர்
மதிப்பிற்கு, பட்டை தீட்டப்பட்ட வைரங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இது, மொத்த வைர ஏற்றுமதியில், 40 சதவீதம்.இதே நிதியாண்டில்,
142 கோடி டாலர் மதிப்பிற்கு, வைரம் பதித்த தங்க ஆபரணங்கள்,
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றுக்கு, 5.8 சதவீத சுங்க வரி வசூலிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|