பதிவு செய்த நாள்
08 மார்2018
00:23

புதுடில்லி:‘பேடிஎம்’ நிறுவனம், ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப்பை சேவையில் ஈடுபடுகிறது. இந்நிறுவனம், முதலீடு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சொத்து நிர்வாக சேவைகளுக்கு, ‘பேடிஎம் மணி’ என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளது. இந்நிறுவனத்திற்கு, பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர் என்ற உரிமத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.
இது குறித்து, ‘பேடிஎம்’ வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலீடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு, ‘பேடிஎம் மணி’ உரிமம் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் முன்னணியில் உள்ள அனைத்து, சொத்து நிர்வாக நிறுவனங்களின் தகவல்களையும் ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.முதன்முதலாக, தரகு கட்டணமின்றி, மியூச்சுவல் பண்டு முதலீடுகள் சார்ந்த சேவைகளில், நிறுவனம் களமிறங்க உள்ளது. இதற்காக, ஆண்ட்ராய்டு மற்றும், ஐ.ஓ.எஸ்., இயக்கத் தொகுப்பில் செயல்படக் கூடிய, ‘ஆப்’ உருவாக்கப்படும். ஏப்ரலில், ‘பேடிஎம் மணி’யின் முதலீட்டு ஆலோசனை சேவையை துவக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|