பதிவு செய்த நாள்
08 மார்2018
00:24

சென்னை:சென்னையைச் சேர்ந்த, டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சரக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடுகிறது.
இந்நிறுவனம், ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் விற்றுமுதல் கண்டு வருகிறது. இதில், வாகனம், நுகர்வோர் பொருட்கள், பொறியியல் துறை சார்ந்த சரக்கு போக்குவரத்து சேவைகளின் பங்களிப்பு, 70 சதவீதமாக உள்ளது.அடுத்து, கட்டுமான துறை சார்ந்த சரக்கு போக்குவரத்து சேவையிலும் கால் பதிக்க, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. மொத்தமாக, சிமென்ட், உருக்கு உள்ளிட்ட, கட்டுமான பொருட்களின் சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.
மேலும், கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்து, தேவைப்படும் போது கட்டுமான நிறுவனங்களுக்கு சப்ளை செய்வது குறித்தும் ஆராய்கிறது. பைப்புகள், மின் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு கிடங்குகள் அமைத்து, அங்கிருந்து, கட்டுமான பணியிடத்திற்கு அனுப்புவது குறித்தும் பரிசீலிக்கிறது.
இத்தகைய வர்த்தக நடவடிக்கைகள் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட, டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|