பதிவு செய்த நாள்
09 மார்2018
01:40

புதுடில்லி : ‘‘மின் வாகனங்களுக்கு, ‘சார்ஜ்’ செய்யும் மையங்கள் அமைப்பது உள்ளிட்ட, கட்டமைப்பு வசதிகள் தொடர்பான, மத்திய அரசின் கொள்கை, இரு வாரங்களில் வெளியாகும்,’’ என, மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங் தெரிவித்து உள்ளார்.
அவர் பேசியதாவது: இந்தியாவில், 2030ல், பொது போக்குவரத்தில், மின் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும். இதையொட்டி, மின் வாகன சார்ஜ் மையங்கள் அமைத்தல், ஏல நடைமுறை, மின் கட்டணம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நெறிமுறைகள்,இரு வாரங்களில் வெளியிடப்படும்.
தற்போதுள்ள மின்சார சட்டத்தின்படி, மின் வினியோக நிறுவனங்கள் மட்டுமே, மின்சாரத்தை விற்பனை செய்ய முடியும். இனி, மின் வாகனங்களுக்கான மின்சார விற்பனை, சேவை பிரிவில் சேர்க்கப்படும். இதற்காக, மின் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
இதனால், ஏராளமான நிறுவனங்கள், நாடு முழுவதும், மின் வாகன சார்ஜ் நிலையங்களை அமைக்க முன்வரும். இந்நிலையங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணம், சராசரி மின் உற்பத்திச் செலவை விட, 15 சதவீதம் கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|