பதிவு செய்த நாள்
09 மார்2018
01:41

மும்பை: தனியார் துறையைச் சேர்ந்த, பந்தன் வங்கி, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது. இவ்வெளியீடு, மார்ச், 15ல் துவங்கி, 18ல் முடிவடைகிறது. பங்கு ஒன்றின் விலை, 370 -– 375 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வங்கி, 4,473 கோடி ரூபாய் மதிப்புள்ள, 11.9 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இது, வங்கித் துறையில் மேற்கொள்ளப்படும், மிகப்பெரிய பங்கு வெளியீடு என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், கோல்டுமேன் சாக்ஸ் செக்யூரிட்டிஸ், ஜே.எம்.பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ், ஜே.பி.மார்கன் இந்தியா ஆகியவை, இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்க உள்ளன.
குறுங் கடன் நிறுவனமான, பந்தன் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு, 2014ல், ரிசர்வ் வங்கி, வங்கி உரிமம் வழங்கியது. இதையடுத்து, பந்தன் வங்கி உருவானது. இந்தியாவில், முதன்முதலாக, குறுங்கடன் துறையில் இருந்து, வங்கித் துறைக்கு வந்த பெருமை, பந்தன் வங்கிக்கு உண்டு.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|