பதிவு செய்த நாள்
09 மார்2018
01:42

புதுடில்லி : ‘கடந்த, 11 மாதங்களில், நாட்டின், நேரடி வரிகள் வாயிலாக, 7.44 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது’ என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டில், ஏப்., – பிப்., வரையிலான, 11 மாதங்களில், நிகர நேரடி வரி வருவாய், 7.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2016- – 17ம் நிதியாண்டின், இதே காலத்தில் வசூலிக்கப்பட்டதை விட, 19.5 சதவீதம் அதிகம். வரும், 2018-- – 19ம் நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட, 10.05 லட்சம் கோடி ரூபாயில், 74.3 சதவீதமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், மொத்த நேரடி வரி வருவாய், 14.5 சதவீதம் உயர்ந்து, 8.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கூடுதலாக வரி செலுத்தியோருக்கு, 1.39 லட்சம் கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 11 மாதங்களில், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாயிலான, நிகர வரி வருவாய், 19.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், தனிநபர் வருமான வரி வசூல், 18.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|