பதிவு செய்த நாள்
09 மார்2018
15:35

பெங்களூரு : வங்கிகளில் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா தொடர்பான வழக்கு கர்நாடகா ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின் போது ஆஜரான விஜய் மல்லையாவின் யூபி குழுமம், ரூ.12,400 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கான கடன் பாக்கியை செலுத்த தயாராக உள்ளோம். ரூ.6000 கோடி கடனையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் சஜன் கூறுகையில், ஜனவரி மாதம் கணக்கிட்ட போது இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.13,400 கோடியாக இருந்தது. தற்போது சந்தை மதிப்பு குறைந்ததால் சொத்து மதிப்பு ரூ.12,400 கோடியாக குறைந்துள்ளது. அதனால் வட்டியுடன் சேர்த்த அனைத்து பாக்கியும் ரூ.10,000 கோடிக்கு மேல் போகாது என தெரிவித்தார்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 2 ம் தேதிக்கு உத்தரவிட்டு, தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|