பயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்புபயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்பு ... வலைதளத்தில் போலிகள் விற்பனை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டு திட்டம் வலைதளத்தில் போலிகள் விற்பனை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டு திட்டம் ...
மார்ச் 15 – 29 வரை நடைபெறுகிறது:ஏற்றுமதியாளர்கள் நிலுவைக்கு தீர்வு காண ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ முகாம்களுக்கு ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
00:45

புதுடில்லி:ஏற்­று­ம­தி­யா­ளர்­களின், ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கில், நாடு முழு­வ­தும், சிறப்பு முகாம்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.‘வரும், 15ல் துவங்கி, 29 வரை நடை­பெ­றும் இந்த முகாம்­களை அணுகி, செலுத்­திய வரியை திரும்­பப் பெறு­வது தொடர்­பான பிரச்­னை­க­ளுக்கு, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் தீர்வு காண­லாம்’ என, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம் தெரி­வித்து உள்­ளது.
ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பலர், வெளி­நா­டு­களில் இருந்து மூலப்­பொ­ருட்­களை இறக்­கு­மதி செய்து, மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­க­ளாக மாற்றி, ஏற்­று­மதி செய்­கின்­ற­னர்.இத்­த­கை­யோர், இறக்­கு­மதி செய்­யும் பொருட்­க­ளுக்கு, 0.1 சத­வீ­தம் வரி செலுத்­து­கின்­ற­னர். பின், மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­களை ஏற்­று­மதி செய்து, அது தொடர்­பான ஆவ­ணங்­களை அளித்து, இறக்­கு­ம­தி­யின் போது செலுத்­திய, 0.1 சத­வீத வரியை திரும்­பப் பெறு­கின்­ற­னர்.இது தவிர, ஏ.ஏ., இ.பி.சி.ஜி., மற்­றும், இ.ஓ.யு., திட்­டங்­களின் கீழ், உள்­நாட்­டில் கொள்­மு­தல் செய்­யும் பொருட்­க­ளுக்கு செலுத்­தும், ஜி.எஸ்.டி., அல்­லது, ஐ.ஜி.எஸ்.டி.,யும், சப்­ளை­யர்­கள் அல்­லது ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு திரும்ப வழங்­கப்­ப­டு­கிறது.
இந்த வகை­யில், மூலப்­பொ­ருட்­கள் இறக்­கு­ம­திக்கு செலுத்­திய வரி மற்­றும் ஏற்­று­ம­தி­யின் போது, துறை­மு­கங்­களில் செலுத்­திய வரி விப­ரங்­களை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ஜி.எஸ்.டி.ஆர்., – 1 மற்­றும், ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி படி­வங்­களில் தாக்­கல் செய்­கின்­ற­னர்.
இந்த படி­வங்­களில் உள்ள விப­ரங்­கள், ஒன்­றுக்கு ஒன்று பொருந்­தும் பட்­சத்­தில், ஏற்­று­மதி செய்த ஒரு வாரத்­தில், செலுத்­திய வரி­யில், 90 சத­வீ­தத்தை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் திரும்­பப் பெற­லாம்.கணக்கு தாக்­க­லில் பிழை­கள் அல்­லது தவ­று­கள் இருந்­தால், ‘ரீபண்டு’ வழங்­கு­வது தாம­த­மா­கும். இதற்கு, வரியை கணக்­கி­டு­வ­தி­லும், ஜி.எஸ்.டி., நடை­முறை சிக்­க­லும் கூட, ஒரு­வ­கை­யில் கார­ணம் என­லாம்.இந்த தாம­தத்­தால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், நடை­முறை மூல­தன தேவை­களை சமா­ளிக்க முடி­யா­மல் தத்­த­ளிக்­கின்­ற­னர்.
இது குறித்து, மத்­திய நேரடி வரி­கள் வாரிய தலை­வர், வனஜா சர்னா கூறி­ய­தா­வது:நாடு முழு­வ­தும், 15 – 29 வரை நடை­பெ­றும் சிறப்பு முகாம்­களில், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ‘ரீபண்டு’ பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண­லாம். அவர்­களின் கணக்கு தாக்­க­லில் உள்ள தவ­று­களை சரி­செய்ய, அதி­கா­ரி­கள் உத­வு­வர். இம்­மாத இறு­திக்­குள், பெரும்­பான்மை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, நிலுவை கிடைக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
நீட்டிப்பு
ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு திரும்ப அளிக்க வேண்­டிய தொகை­யில், இது­வரை, 5,000 கோடி ரூபாய் வழங்­கப்­பட்டு உள்­ளது. இன்­னும், 70 சத­வீத தொகை, எட்டு மாதங்­க­ளாக நிலு­வை­யில் உள்­ளது. ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், வரியை திரும்­பப் பெற விண்­ணப்­பிக்­கும் கால வரம்பு, அக்., வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது. ‘இ – வாலட்’ மூலம், ‘ரீபண்டு’ அளிக்­கும் வசதி, அக்­டோ­ப­ரில் அம­லுக்கு வர உள்­ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ‘‘மின்னணு வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை, மத்திய அரசு மாற்றிக் கொண்ட போதிலும், ... மேலும்
business news
புதுடில்லி : நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 7 ... மேலும்
business news
புதுடில்லி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைக்குமா என்பது இன்று தெரியவரும். இது குறித்து, ... மேலும்
business news
விமான பராமரிப்பு நிறுவனம் ஒன்று, சென்னை விமான நிலையத்தில், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய, புரிந்துணர்வு ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு சந்தை ஆண்டில், பிப்., 15 வரையிலான காலத்தில், 8.07 சதவீதம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)