பதிவு செய்த நாள்
14 மார்2018
09:59

மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. நிப்டி 10,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மார்ச் 14, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 99.50 புள்ளிகள் சரிந்து 33,757.28 புள்ளிகளாகவும், நிப்டி 37.60 புள்ளிகள் சரிந்து 10,389.30 புள்ளிகளாகவும் உள்ளன. டிசிஎஸ், டெக் மகேந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டல்கோ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பெரு நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, போங்க் ஆப் இந்தியா, எஸ் வங்கி, ஆந்திரா வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கித்துறை நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|