தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் தொழில் கொள்கை விரைவில்தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் தொழில் கொள்கை விரைவில் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.92 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.92 ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
அடுத்த 2 ஆண்டுகளில்... இந்திய ரியல் எஸ்டேட் சந்தை 18,000 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2018
00:30

புதுடில்லி:‘இந்­திய ரியல் எஸ்­டேட் துறை­யின் சந்தை மதிப்பு, அடுத்த இரு ஆண்­டு­களில், 18 ஆயி­ரம் கோடி டால­ராக, அதா­வது, 11,700 லட்­சம் கோடி ரூபாய் என்ற அள­விற்கு உய­ரும்’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.
ரியல் எஸ்­டேட் துறை குறித்து, ‘கிரெ­டாய்’ மற்­றும், ஜே.எல்.எல்., நிறு­வ­னங்­கள் கூட்­டாக வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:இந்­திய ரியல் எஸ்­டேட் துறை வளர்ச்­சிக்கு, ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம், ஜி.எஸ்.டி., அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­கள் தளர்வு போன்ற, மத்­திய அர­சின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள் துணை புரி­கின்றன.
கடந்த, 2014 முதல், இந்­திய வீட்­டு­வ­சதி துறை­யில், 59 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு குவிந்­துள்­ளது. இதில், ரியல் எஸ்­டேட் துறை­யின் பங்கு, 47 சத­வீ­த­மாக உள்­ளது.ரியல் எஸ்­டேட் சந்தை, 2015 நில­வ­ரப்­படி, 12,600 கோடி டால­ராக இருந்­தது. இது, 2020ல், 18 ஆயி­ரம் கோடி டால­ராக உய­ரும்.இதே காலத்­தில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், வீட்­டு­வ­சதி துறை­யின் பங்கு, இரு மடங்கு உயர்ந்து, 11 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும்.
நாட்­டின் வளர்ச்சி கார­ண­மாக, நகர்­ம­ய­மாக்­கல் அதி­க­ரித்து வரு­கிறது. குடும்­பங்­களின் வரு­வா­யும் உயர்ந்­துள்­ளது. இத­னால், குறைந்த விலை வீடு­க­ளுக்­கான தேவை பெருகி உள்­ளது.ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை ஆணை­யங்­கள், இந்­திய ரியல் எஸ்­டேட் துறையை ஒருங்­கி­ணைக்க உத­வும்; நேர்­மை­யற்ற கட்­டு­மான நிறு­வ­னங்­களை களை­யெ­டுக்­கும்.
இந்த ஆணை­யத்­தில் பதிவு செய்­துள்ள கட்­டு­மான நிறு­வ­னங்­கள் மீது, நுகர்­வோ­ருக்கு நம்­பிக்கை ஏற்­படும். ஜி.எஸ்.டி., கார­ண­மாக, ரியல் எஸ்­டேட் துறை­யில், 3 – - 4 சத­வீத செலவு குறை­யும்.டில்லி, மும்பை, சென்னை உள்­ளிட்ட, எட்டு முக்­கிய நக­ரங்­கள் மட்­டு­மின்றி, நாக்­பூர், கொச்சி, சண்­டி­கர், பாட்னா உள்­ளிட்ட நக­ரங்­களும், ரியல் எஸ்­டேட் துறை­யின் வளர்ச்சி மையங்­க­ளாக உரு­வெ­டுக்­கும்.
இத்­து­றை­யின் வளர்ச்­சிக்கு, தளர்த்­தப்­பட்ட அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களும் துணை புரி­யும். ரியல் எஸ்­டேட் துறை­யில், தனி­யார் பங்கு முத­லீ­டு­கள், ஆண்­டுக்கு ஆண்டு அதி­க­ரிக்­கின்றன.இத்­து­றை­யில், 2017ல், தனி­யா­ரின் பங்கு மற்­றும் கடன் பத்­திர முத­லீடு, 12 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. குறைந்த விலை வீடு­கள் மற்­றும் கிடங்­கு­கள் பிரி­வி­லும், முத­லீ­டு­கள் குவி­கின்றன.
குறைந்த விலை வீடு­க­ளுக்கு, அடிப்­படை கட்­ட­மைப்பு அந்­தஸ்து வழங்­கப்­பட்­டி­ருப்­பது, கட்­டு­மான துறை வளர்ச்­சிக்கு வழி­வ­குக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
மாற்றத்திற்கான நேரம்
சமீ­பத்­திய முன்­னேற்­றங்­கள் மூலம், ரியல் எஸ்­டேட் துறை­யில், மாற்­றத்­திற்­கான நேரம் வந்­தி­ருப்­பது கண்­கூ­டா­கத் தெரி­கிறது. ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை சட்­டம், ஜி.எஸ்.டி., ஆகி­யவை, ரியல் எஸ்­டேட் துறைக்கு வலு­வான அடித்­த­ளத்தை அமைத்­துக் கொடுத்­துள்ளன. இத்­து­டன், இந்­தி­யா­வின் பல­மான பொரு­ளா­தார முன்­னேற்­றம், ரியல் எஸ்­டேட் துறை வளர்­சிக்கு சாத­க­மாக உள்­ளது.
ரமேஷ் நாயர்
தலைமை செயல் அதிகாரி, ஜே.எல்.எல்.,

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி: தொழில் முனைவோருக்கான, ‘முத்ரா’ நிதியுதவி திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி ... மேலும்
business news
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பால் கிடைத்த பயனை, ‘டிவி’ வாங்குவோருக்கு வழங்காதது ஏன் என, விளக்கம் அளிக்கும்படி, ... மேலும்
business news
புதுடில்லி : வங்கிகள் வாரியம், வங்கித் துறையில், 75 மூத்த அதிகாரிகளை, தலைமை பொறுப்பிற்கு தகுதியுள்ளவர்கள் என, ... மேலும்
business news
புதுடில்லி: ‘பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் நிதி ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)