‘என் மகள் தான், ‘ஆர்ஜியோ’ உருவாக காரணம்’‘என் மகள் தான், ‘ஆர்ஜியோ’ உருவாக காரணம்’ ... உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி., உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி., ...
இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி; ‘சென்செக்ஸ்’ 509 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2018
00:09

மும்பை : சர்­வ­தேச மற்­றும் உள்­நாட்டு அர­சி­யல் நில­வ­ரம் கார­ண­மாக, இந்­திய பங்­குச் சந்­தை­கள், நேற்று வீழ்ச்சி கண்­டன.

மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 509 புள்­ளி­கள் வீழ்ச்சி கண்டு, 33 ஆயி­ரத்து, 176 புள்­ளி­களில் நிலை கொண்­டது.தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 165 புள்­ளி­கள் இறக்­கம் கண்டு, 10 ஆயி­ரத்து, 195 புள்­ளி­களில் நிலை பெற்­றது.

வர்த்தகப் போர்:
இந்த சரிவு குறித்து, பங்­குச் சந்தை வல்­லு­னர்­கள் கூறி­ய­தா­வது: இந்­தியா மட்­டு­மின்றி, சீனா, ஜப்­பான் உள்­ளிட்ட ஆசிய நாடு­களின் பங்­குச் சந்­தை­களும் நேற்று சரிவை கண்­டன. ஐரோப்­பிய பங்­குச் சந்­தை­க­ளி­லும், வர்த்­த­கம் சரி­வு­டன் துவங்­கி­யது. அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்­பின் நட­வ­டிக்­கை­க­ளால் ஏற்­பட்­டுள்ள ஸ்தி­ர­மற்ற அர­சி­யல் சூழல்.

அந்­நாட்டு மத்­திய வங்கி, வட்டி விகி­தத்தை உயர்த்­தும் என எதிர்­பார்ப்பு; இறக்­கு­மதி வரியை உயர்த்­தி­ய­தால், சர்­வ­தேச வர்த்­த­கப் போர் மூளும் என்ற அச்­சம் ஆகி­யவை, ஐரோப்­பிய, ஆசிய பங்­குச் சந்­தை­களின் சரி­விற்கு கார­ணங்­கள் என­லாம்.

இத்­து­டன், இந்­தியா, ஏற்­று­மதி மானி­யத்தை குறைக்க வேண்­டும் என, அமெ­ரிக்கா, உலக வர்த்­தக அமைப்­பில் அளித்­துள்ள புகார்; சீனப் பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு கூடு­தல் வரி விதிக்­கப் போவ­தாக டிரம்ப் விடுத்­துள்ள மிரட்­டல் போன்­ற­வை­யும், இந்­தியா, சீனா, ஜப்­பான் உள்­ளிட்ட ஆசிய நாடு­களின் பங்­குச் சந்­தை­கள் சரிய வழி வகுத்­தன.

எனி­னும், இந்­திய பங்­குச் சந்­தை­கள் சரி­விற்கு மேலும் பல கார­ணங்­களை கூற­லாம். குறிப்­பாக, பா.ஜ., கூட்­ட­ணி­யில் இருந்து தெலுங்கு தேசம் விலகி உள்­ள­தும்; எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைக்க, காங்., துவக்­கி­யுள்ள முயற்­சி­களும்; மத்­திய அரசு மீது, ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி நம்­பிக்கை இல்லா தீர்­மா­னத்­திற்கு நோட்­டீஸ் அளித்­துள்­ள­தும், தேசிய அர­சி­யலை பர­ப­ரப்­பாக்­கி­யுள்­ளது.

பங்கு விற்பனை:
இத­னால், இந்த ஆண்டே பொதுத் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்­பும் எழுந்­துஉள்­ளது.பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்ட நீண்ட கால மூல­தன ஆதாய வரி, ஏப்., 1 முதல் அம­லுக்கு வர உள்­ளது. இதில், பிப்., 1 முதல் மார்ச் 31 வரை நடை­பெ­றும் பங்கு பரி­வர்த்­த­னை­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் கார­ண­மாக, பங்­கு­கள் மூலம் லாபம் ஈட்­டிய முத­லீட்­டா­ளர்­கள், மூல­தன ஆதாய வரியை தவிர்க்­கும் பொருட்டு, பங்­கு­களை விற்­பனை செய்­த­னர்.

பங்கு ஈட்டு மதிப்­பின் அடிப்­ப­டை­யில், சந்­தை­யின் பங்கு மூல­தன விகி­தா­சா­ரம், அள­விற்கு அதி­க­மாக உயர்ந்­துள்­ளது. இது­வும் பங்கு விற்­பனை அதி­க­ரிக்க துணை புரிந்து, பங்­குச் சந்­தை­யின் இறக்­கத்­திற்கு வழி வகுத்­துள்­ளது. இவ்­வாறு அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ஏற்றம் – இறக்கம்:
நேற்­றைய வர்த்­த­கத்­தில், மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­களில், 1,763 நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை சரி­வ­டைந்­தன. எனி­னும், 917 நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை உயர்­வு­டன் கைமா­றின. 168 பங்­கு­களின் விலை, எவ்­வி­த­மான ஏற்­றமோ, இறக்­கமோ இன்றி நிலை­யாக இருந்­தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)