பதிவு செய்த நாள்
19 மார்2018
08:01
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிப்டி, ஜனவரி மாதத்தில், வரலாற்று உச்சத்தை எட்டிய பின், பிப்ரவரி மாதம் துவங்கி, தற்போது வரை சரிவில் வர்த்தகமாகிறது. இதுவரை, 1,000 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. கடந்த வார குறைந்த அளவும், தற்போதைய, 200 நாட்கள் சராசரியுமான, 10,150 புள்ளி நல்ல சப்போர்ட் ஆகும். 100 நாட்கள் சராசரியான, 10,455 ரெசிஸ்டென்ஸ் ஆக உள்ளது.
அண்மையில் தெலுங்கு தேசம் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது. மற்றும், வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தல், இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பிப்ரவரி மாதத்தின் மொத்தவிலை பணவீக்கம், முந்தைய மாதத்தை விட சிறிய அளவே குறைந்து காணப்பட்டது. அதாவது, 2.48 சதவீதமாக இருந்தது. தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி குறியீடு, ஜனவரி மாதம், 7.5 சதவீதமாகும். இது, டிசம்பர் மாதத்தில் இருந்த, 7.1 சதவீதத்தை விட அதிகமாகும்.
டி.சி.எஸ்., நிறுவன பங்குகளில், கடந்த வாரத்தில், 6.5 சதவீதம் அளவுக்கு சரிவு நிகழ்ந்தது. இதற்கு, டாடா சன்ஸ், அவர்களின், 1.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ததே காரணமாகும்.பொதுத்துறை வங்கிகள், அதன் வாராக்கடன் அதிகரிப்பு, மற்றும் நிர்வாக சீர்கேடு, ஊழல் போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. மத்திய அரசு இதை சீர்செய்ய சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி, பல முக்கிய முடிவுகளை எடுத்து, அவற்றை அமல்படுத்தி வருகிறது.
ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில், கடந்த வாரம் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. அமெரிக்க அதிபர், டிரம்ப் புதிதாக கொண்டு வந்துள்ள, இறக்குமதி வரிவிதிப்பு மற்றும் இதனால் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இறக்குமதி வரி ஆகியவை, சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டியின் முதல் மற்றும் முக்கியமான சப்போர்ட், 10,140 முதல் 10150 வரை ஆகும். இதை கடக்கும் நிலையில், 10,035 அடுத்த இலக்காகும். ரெசிஸ்டென்ஸ் 10,380 மற்றும் 10,455 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்:
ஐ.டி.சி., டி.சி.எஸ்., கே.பி.ஐ.டி.ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ் எச்.எஸ்.ஐ.எல்.,
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|