பதிவு செய்த நாள்
19 மார்2018
08:17

‘செபி’ அமைப்பின் வழிகாட்டுதலின் படி, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் புதிய நெறிமுறைகளுக்கு ஏற்ப, தங்கள் திட்டங்களை மாற்றி அமைக்கத் துவங்கியுள்ளன.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், தங்கள் திட்டங்களின் பெயர்களை மாற்றத் துவங்கியிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ஏற்கனவே முதலீடு செய்திருந்த திட்டங்களின் பெயர் மாறியிருக்கலாம் அல்லது அவற்றின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம். இந்த மாற்றங்களால் குழப்பமடைய வேண்டாம். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் வழிகாட்டுதலில்படியே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்வதை எளிதாக்கும் வகையில் செபி, இவற்றுக்கான புதிய வகைப்படுத்தலை வெளியிட்டது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த வகைப்படுத்தலுக்கு ஏற்ப, தங்கள் நிதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் செபி வலியுறுத்தியது.
கடன்சார் நிதிகள்:
இதன்படி சமபங்கு பிரிவில், 10 வகையான திட்டங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. பாண்டு பிரிவில், 16 வகை மற்றும் ஹைப்ரிட் பிரிவில், 6 வகை திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர இன்டெக்ஸ் பண்ட், பண்ட் ஆப் பண்ட்ஸ் மற்றும் தீர்வு நோக்கிலான நிதிகள் உள்ளன.இதற்கு முன், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்படாமல் இருந்தன. ஒரு குறிப்பிட்ட பிரிவு திட்டம் வேறு பிரிவின் அம்சங்களையும் கொண்டிருக்கும் வகையில் இருந்ததால், முதலீட்டாளர்கள் புரிதலில் சிக்கல் நிலவியது. இதை தவிர்க்கவே செபி, திட்டங்களின் பிரிவை வகைப்படுத்தி அதை பின்பற்றுமாறு அறிவுறுத்தியது.
இதற்கேற்ப நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் பெயர்களை மாற்றி சீரமைத்து வருகின்றன. டெப்ட் பண்ட் எனப்படும் கடன்சார் நிதிகளில் இந்த மாற்றம் எப்படி செயல்படுகிறது என பார்க்கலாம்.இவை பொதுவாக ஷார்ட் டெர்ம் இன்கம் பண்ட்ஸ் அல்லது லாங்க் டெர்ம் இன்கம் பண்ட்ஸ் என அமைந்திருந்தன. ஆனால் இவை மிகவும் பரவலான தன்மை கொண்டிருந்தன.
உதாரணத்திற்கு சராசரியாக நான்கு ஆண்டு கால முதிர்வு கொண்ட நிதியும், ஷார்ட் டெர்ம் பிரிவில் இருக்கலாம். 1.5 ஆண்டு கால முதிர்வு கொண்ட நிதியும் இதே பிரிவில் அமைந்திருக்கலாம். ஆனால், தற்போது வட்டி விகித ரிஸ்க் மற்றும் கிரெடிட் ரிஸ்கிற்கு ஏற்ப இவை தெளிவாக வகைப்படுத்தப்பட வேண்டும்.
நீண்ட கால நிதிகள்:
ஷார்ட் டெர்ம் இன்கம் பண்ட் தற்போது நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. லோ டுயுரேஷன் பண்ட், ஆறு மாதம் முதல், 12 மாதங்கள் வரை முதிர்வு கொண்ட கடன் மற்றும் மணி மார்க்கெட் பத்திரங்களில் முதலீடு செய்யும். ஒன்று முதல் மூன்று ஆண்டு வரை முதிர்வு கொண்டவற்றில் முதலீடு செய்யும் நிதிகள் ஷார்ட் டியூரேஷன் பண்டாக அமையும். இவைத் தவிர மீடியம் டியூரேஷன் மற்றும் மணி மார்க்கெட் பண்ட் ஆகிய இரண்டு பிரிவுகள் உண்டு. இதே போல லாங்க் டெர்ம் டியூரேஷன் நிதிகள் மீடியம் முதல் நீண்ட காலம் வரையான நிதிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இவை, நான்கு முதல் ஏழு ஆண்டு கால முதிர்வு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நீண்ட கால நிதிகள் ஏழு ஆண்டுகளுக்கு மேல் முதிர்வு உள்ள பத்திரங்களில் முதலீடு செய்யும். இதற்கு முன், கார்ப்பரேட் பாண்டு எனும் பிரிவு கிடையாது. தற்போது இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யும். கிரெடிட் ரிஸ்க் பண்ட் எனும் புதிய பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|