பதிவு செய்த நாள்
20 மார்2018
01:55

சென்னை : நெல், கரும்பு போன்றவற்றுக்கு, அரசே விலை நிர்ணயம் செய்வது போல, நிலக்கடலைக்கும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நிலக்கடலை விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதால், இத்தகையை கோரிக்கையை விவசாயிகள் எழுப்பி இருக்கின்றனர். வேதாரண்யம் பகுதியில், கத்திரிப்புலம், புஷ்பவனம் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,000 ஏக்கரில் கடலை சாகுபடி செய்யப்பட்டது. கடந்தாண்டு கிலோ, 40 ரூபாய்க்கு விலை போன கடலை, இந்தாண்டு, 25 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தண்ணீர் பற்றாக்குறை, நோய் பாதிப்பு போன்ற பல காரணங்களால், சாகுபடியும் பாதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|