எம்.ஜி., மோட்டார் இந்தியா ரூ.5,000 கோடி முதலீடுஎம்.ஜி., மோட்டார் இந்தியா ரூ.5,000 கோடி முதலீடு ... திவால் நிறுவனங்களால் எல்.ஐ.சி.,க்கு பாதிப்பு? திவால் நிறுவனங்களால் எல்.ஐ.சி.,க்கு பாதிப்பு? ...
தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை, ‘ஜோர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:59

புதுடில்லி : பெட்­ரோல், டீசல் விற்­ப­னை­யில், தனி­யார் நிறு­வ­னங்­கள் இரு மடங்கு வளர்ச்சி கண்­டுள்­ளன.

இது குறித்து, மத்­திய பெட்­ரோ­லி­யத் துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான், பார்லி.,யில் கூறி­ய­தா­வது: பொதுத் துறை­யில், ஐ.ஓ.சி., – பி.பி.சி., – எச்.பி.சி., ஆகிய மூன்று நிறு­வ­னங்­கள், பெட்­ரோல், டீசல் விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்­ளன. இதில், 2002, மார்ச்­சில், தனி­யா­ருக்கு அனு­மதி அளிக்­கப்­பட்டு, அடுத்த மாதம், எரி­பொ­ருள் விலை கட்­டுப்­பாடு தளர்த்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து, ரிலை­யன்ஸ், எஸ்­ஸார் மற்­றும் ஷெல் நிறு­வ­னங்­கள், எரி­பொ­ருள் சில்­லரை விற்­ப­னை­யில் கள­மி­றங்­கின. துவக்­கத்­தில் ஆர்­வ­மு­டன் பெட்­ரோல் நிலை­யங்­களை திறந்­தன. ஆனால், 2004 – -05ம் நிதி­யாண்­டில், மத்­திய அரசு, மீண்­டும் எரி­பொ­ருள் விலை உயர்வை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­தது. இத­னால், மானிய விலை­யில் எரி­பொ­ருள் விற்­பனை செய்த, பொதுத் துறை எண்­ணெய் நிறு­வ­னங்­களை சமா­ளிக்க முடி­யா­மல், தனி­யார் நிறு­வ­னங்­கள் திண­றின. அவற்­றின் வர்த்­த­கம் குறைந்­தது.

இந்­நி­லை­யில், 2010, ஜூனில், பெட்­ரோல்; 2014, அக்­டோ­ப­ரில், டீசல் ஆகி­ய­வற்­றின் மீதான விலை கட்­டுப்­பாடு முழு­மை­யாக தளர்த்­தப்­பட்­டது. இதன் விளை­வாக, பெட்­ரோல், டீசல் விற்­ப­னை­யில், தனி­யார் நிறு­வ­னங்­க­ளின் பங்கு, 2015 -– 16ல், முறையே, 3.5 மற்­றும், 3.1 சத­வீ­த­மாக உயர்ந்து, மறு நிதி­யாண்­டில், 5.3 மற்­றும், 6 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தது.

நடப்பு 2017- – 18ம் நிதி­யாண்­டில், பெட்­ரோல் மற்­றும் டீச­லில், தனி­யா­ரின் பங்கு, முறையே, 6.8 மற்­றும், 8.2 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இந்த வகை­யில், 2015- – 16ல், 5.8 லட்­சம் டன்­னாக இருந்த டீசல் விற்­பனை, தற்­போது, இரு மடங்கு உயர்ந்து, 11.9 லட்­சம் டன்­னாக ஏற்­றம் கண்­டுள்­ளது. இதே காலத்­தில், பெட்­ரோல் விற்­ப­னை­யும், இரு மடங்கு அதி­க­ரித்து, 7.67 லட்­சம் டன்­னில் இருந்து, 15.9 லட்­சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.

இதே காலத்­தில், பொதுத் துறை நிறு­வ­னங்­க­ளின் டீசல் விற்­பனை, 6.17 கோடி டன்­னில் இருந்து, 5.82 கோடி டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது. பெட்­ரோல் விற்­பனை, 2.09 கோடி டன்­னில் இருந்து, 2.19 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)