தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை, ‘ஜோர்’தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை, ‘ஜோர்’ ... சந்தை நிலவரம்: தொட­ரும் காய்­கறி விலை வீழ்ச்சி சந்தை நிலவரம்: தொட­ரும் காய்­கறி விலை வீழ்ச்சி ...
திவால் நிறுவனங்களால் எல்.ஐ.சி.,க்கு பாதிப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
02:00

மும்பை : திவால் நட­வ­டிக்­கைக்கு ஆளான நிறு­வ­னங்­களில் செய்­துள்ள பங்கு முத­லீ­டு­க­ளால், எல்.ஐ.சி.,யின் சொத்து மதிப்பு பாதிக்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இந்­தி­யா­வின் மிகப் பெரிய ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­ன­மான, எல்.ஐ.சி., பல நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்­றில் முத­லீடு செய்­கிறது. இந்­நி­லை­யில், சமீ­பத்­திய பஞ்­சாப் நேஷ­னல் வங்கி மோச­டி­யில் சிக்­கி­யுள்ள, கீதாஞ்­சலி ஜெம்ஸ்; பங்கு விலையை செயற்­கை­யாக உயர்த்­தி­யது தொடர்­பாக, ‘செபி’ விசா­ர­ணைக்கு ஆளா­கி­யுள்ள, வக்­ரன்கீ போன்ற இடர்ப்­பாட்டு நிறு­வ­னங்­க­ளி­லும், எல்.ஐ.சி., பங்கு முத­லீடு செய்­துள்­ளது, தற்­போது விவ­கா­ர­மா­கி­யுள்­ளது.

அது மட்­டு­மின்றி, ரிசர்வ் வங்கி பரிந்­து­ரைப்­படி, தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யத்­தில், திவால் நட­வ­டிக்­கைக்கு ஆளா­கி­யுள்ள பல நிறு­வ­னங்­க­ளி­லும், எல்.ஐ.சி., பங்கு முத­லீடு செய்­து உள்­ளது.இவற்­றில், பெரும்­பா­லான நிறு­வ­னங்­க­ளின் பங்கு மதிப்பு, உச்ச நிலை­யில் இருந்து, 95 சத­வீ­தம் வரை சரி­வ­டைந்­துள்­ளது. அத­னால், எல்.ஐ.சி., யின் சொத்து மதிப்பு பாதிக்க வாய்ப்பு உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து, எல்.ஐ.சி., நிர்­வாக இயக்­கு­னர், ஹேமந்த் பார்­கவா கூறி­ய­தா­வது: பொது மற்­றும் தனி­யார் துறை­க­ளைச் சேர்ந்த, முன்­னணி நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள் மற்­றும் கடன் பத்­தி­ரங்­களில் தான், எல்.ஐ.சி., முத­லீடு செய்­கிறது. அது­வும், மூன்று ஆண்­டு­க­ளாக, மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘பி.எஸ்.இ., 200’ நிறு­வ­னப் பங்­கு­களில் மட்­டுமே முத­லீடு செய்­யப்­ப­டு­கிறது. பழ­மை­யான எல்.ஐ.சி., நிறு­வ­னம், அரசு கொள்­கையை பின்­பற்றி, மரபு சார்ந்த முத­லீ­டு­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதற்கு மேல் செயல்­பட வாய்ப்பு இல்லை. இவ்­வாறு அவர் கூறி­னார்.

இந்த விவ­கா­ரம் குறித்து சந்­தை­யா­ளர்­கள் கூறும்­போது, ‘எல்.ஐ.சி., வலு­வான நிலை­யில் உள்­ளது. பல நிறு­வ­னங்­க­ளால், எல்.ஐ.சி.,யின் பங்கு முத­லீட்டு மதிப்பு குறைந்­து உள்­ளது உண்மை. ஆனால் அவற்­றில், எல்.ஐ.சி.,யின் பங்கு முத­லீட்டு விகி­தம் மிகக் குறைவே. எனவே, பங்கு முத­லீட்­டின் மீதான நிகர வரு­வாய் அடிப்­ப­டை­யில், இந்த சரிவு சரி கட்­டப்­படும். மேலும், நிறு­வ­னத்­தின் நிதி­யா­தா­ர­மும் வலு­வாக உள்­ளது’ என்­ற­னர்.

முதன்மை நிறுவனம்:
பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­ன­மான, எல்.ஐ.சி., 2017, டிச., நில­வ­ரப்­படி, 27.93 லட்­சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்­டுள்­ளது. 1.20 லட்­சத்­திற்­கும் அதி­க­மான ஊழி­யர்­க­ளு­டன், 17 கோடிக்­கும் மேற்­பட்ட காப்­பீட்­டு­தா­ரர்­க­ளு­டன், இந்­தி­யா­வின் முதன்மை ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­ன­மாக, எல்.ஐ.சி., விளங்­கு­கிறது.

நிறுவனம் எல்.ஐ.சி.,
பங்கு முதலீடு * சந்தை மூலதனம் ** உச்ச மதிப்பில் சரிவு*மந்­தனா இண்­டஸ்., 1.99 18.58 98.31வீடி­யோ­கான் 4.56 493.33 98.21கீதாஞ்­சலி ஜெம்ஸ் 3.79 169.63 97.73ஏ.பி.ஜி., ஷிப்­யார்டு 1.00 95.19 97.67அலோக் இண்­டஸ்., 2.55 437.99 96.67ஆம்­டெக் ஆட்டோ 3.39 646.69 95.00ஜோதி ஸ்ட்­ரக்­சர்ஸ் 1.94 98.27 94.65எலக்ட்ரோ ஸ்டீல் 1.06 1,017.45 71.04வக்­ரன்கீ 6.58 22827.73 57.34ஆப்டோ சர்க்­யூட்ஸ் 1.16 244.38 53.42(** ரூபாய் கோடி­யில் * சத­வீ­தம்)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)