பதிவு செய்த நாள்
25 மார்2018
00:53

சென்னை : கோயம்பேடு மலர் சந்தையில், சாமந்தி வரத்து குறைந்ததால், ஒரு கிலோ, 200 - 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ரோஜா வகைகள், ஒரு கிலோ, 100 - 140 ரூபாய் வரையிலும், அரளி ஒரு பை, 100 ரூபாய்க்கும், மல்லி ஒரு கிலோ, 300 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. அடுத்த ஒரு வாரத்தில், சாமந்தி வரத்து படிப்படியாக குறைந்து விடும் என, வியாபாரிகள் கூறினர். தற்போது கனகாம்பரம் வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ, 300 ரூபாயிலிருந்து, 200 ரூபாய் வரை குறைந்துள்ளது.
வாழை வரத்து அதிகரிப்பு
ஆந்திராவில் இருந்து வாழை வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில், பச்சை வாழை ஒரு தார், 100 ரூபாய்க்கு குறைந்துள்ளது. எலக்கி வாழை கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு தார், 400 ரூபாயாக விற்கப்பட்டது; தற்போது, 200 ரூபாய்க்கு குறைந்துள்ளது. செவ்வாழை ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு குறைந்துள்ளது. வாழைக்காய் ஒன்று, 3 - 5 ரூபாய் வரை விற்பனையாகிறது.
துவங்கியது மாங்காய் சீசன்
கோயம்பேடு சந்தையில், மாங்காய் வரத்து துவங்கியுள்ளது. தற்போது திருவள்ளூர் சுற்றுவட்டாரத்திலிருந்து, கிளிமூக்கு மாங்காய், கொம்பு மாங்காய், வடு மாங்காய் வரத் துவங்கியுள்ளது. தற்போது ஒரு கிலோ, 30 - 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்த சில வாரத்தில், வரத்து மேலும் அதிகமாகி, விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் கூறினர்.
பற்றாக்குறை இல்லை
சென்னையில் காய்கறியை பொருத்தவரை, பற்றாக்குறை இல்லாத அளவுக்கு வரத்தும், விற்பனையும் உள்ளதாக, வியாபாரிகள் கூறினர். தற்போது பீன்ஸ், கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, சுரைக்காய், சேனைக்கிழங்கு, கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட, அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை, ஒரு கிலோ, 8 - 25 ரூபாய் விற்பனையாகிறது. பற்றாக்குறை இல்லாத அளவுக்கு, காய்கறி வரத்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|