புதிய நிதி­யாண்டின் துவக்­கத்தில்  நீங்கள் செய்ய வேண்­டி­யவைபுதிய நிதி­யாண்டின் துவக்­கத்தில் நீங்கள் செய்ய வேண்­டி­யவை ... பங்குச்சந்தை: அச்­சம் உச்­சம் தொடக்­கூ­டும் பங்குச்சந்தை: அச்­சம் உச்­சம் தொடக்­கூ­டும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2018
04:11

கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம் அதி­க­ரித்து, வியா­பா­ரம் ஆனது. ஆறு வார உயர்­வை­யும் எட்­டி­யது. கடந்த வாரத்­தில் மட்­டும், 4.5 டாலர் அள­வுக்கு அதி­க­ரித்து, ஒரு பேரல், 66 டாலர் என்ற அள­வுக்கு உயர்வை கண்­டது.
அமெ­ரிக்கா, சீன இறக்­கு­மதி பொருட்­களுக்கு புதி­தாக வரி­வி­திப்பை அறி­வித்­தது. 60 மில்­லி­யன் டாலர் அள­வுக்கு இறக்­கு­மதி வரி விதிக்­கப்­பட்­டது. இத­னால் ஏற்­பட்ட வர்த்­தக மோதல், அசா­தா­ரண சூழலை ஏற்­படுத்­தி­யது.உல­கின் மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான, சவுதி அரே­பி­யா­வின் எண்­ணெய் அமைச்­ச­கம், எண்­ணெய் உற்­பத்தி குறைப்பு குறித்து பேச்சு நடத்தி வரு­கிறது. தற்­போது, ஒபெக் மற்­றும் ஒபெக்­கில் இல்­லாத உறுப்பு நாடு­கள் ஒருங்­கி­ணைந்து, உற்­பத்தி குறைப்பை தொடர்ந்து வரு­கிறது.
வரும் டிசம்­ப­ரில், இந்த உற்­பத்தி குறைப்பு முடி­வுக்கு வரும் நிலை­யில், அதை, 2019ம் ஆண்­டுக்­கும் நீட்­டிக்க, அரே­பி­யா­வின் எண்­ணெய் அமைச்­ச­கம் முயற்­சிக்­கிறது. அதற்­காக, ஒபெக் உறுப்பு நாடு­க­ளு­ட­னும், ஒபெக்­கில் இல்­லாத மிகப் பெரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான ரஷ்­யா­வு­ட­னும் அது பேச்சு நடத்தி வரு­கிறது. இதை தொடர்ந்து, எண்­ணெய் விலை உயர்வு கண்­டது.மேலும், பிப்­ர­வரி மாதத்­தின் மொத்த உற்­பத்தி குறைப்பு ஒப்­பந்­தப்­படி, உற்­பத்தி முழு­மை­யாக குறைக்­கப்­பட்­டி­ருந்­தது மிக­வும் குறிப்­பி­டத்­தக்க ஒன்­றா­கும்.
மேலும், அமெ­ரிக்க பெட்­ரோ­லி­யம்இன்ஸ்­டி­டி­யூட் மற்­றும் எனர்ஜி தக­வல் மையம் ஆகிய இரண்­டும், ஒவ்­வொரு வார­மும், செவ்­வாய் மற்­றும் புதன் கிழ­மை­களில், எண்­ணெய் இருப்பு விப­ரத்தை வெளி­யிட்டு வரு­கிறது.இதன்­படி, மொத்த இருப்பு, 7 மில்­லி­யன்பேரல்­கள் ஆகும். இது, ஐந்து ஆண்டு சராசரியை விட, 1 சத­வீ­தம் குறை­வா­கும். இதுவும் எண்­ணெய் விலை உயர கார­ண­மாகியது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 4140 4070 4299 4410


தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம், 4 சத­வீ­தம் அதி­க­ரித்து, வர்த்­த­கம் நடை­பெற்­றது. இது, இதற்கு முந்­தைய நான்கு வார சரி­வில் இருந்து, தற்­போது மீண்­டுள்­ளது. ஒரு அவுன்ஸ் தங்­கம், கடந்த வாரத்­தில் மட்­டும், 44 டாலர் உயர்ந்து, 1,347 டாலர் என்ற அள­வில் வர்த்­த­கம் முடி­வுற்­றது.
அமெ­ரிக்­கா­வின், சீன இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு வரி­வி­திக்­கும் செய­லால், இரு­நா­டு­களுக்­கும் இடையே வர்த்­த­கப் போர் ஏற்­படும் என்ற நிலை­யில், இந்த அசா­தா­ரண சூழ­லில், தங்­கம் விலை அதி­க­ரித்­துள்­ளது.மேலும், அமெ­ரிக்க, ஐரோப்­பிய, ஆசிய பங்­குச் சந்­தை­க­ளின் சரிவால், முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளு­டைய முத­லீட்டை தங்­கம் மீது அதி­க­ரித்­த­தும், விலை உயர்­வுக்கு கார­ண­மாகும்.
உல­கின் மிகப்­பெ­ரிய தங்க முத­லீட்டுகழ­க­மான, எஸ்.பி.டி.ஆர்., கோல்டு டிரஸ்ட்­டின் முத­லீட்டு இருப்பு அளவு, 1.26 சத­வீ­தம் உயர்ந்து, 850.84 டன் ஆனது.கடந்த புதன் அன்று நடை­பெற்ற, அமெ­ரிக்க வட்டி விகித கூட்­டத்­தில், வட்டி, 0.25 சத­வீ­தம் அதா­வது, 1.51 சத­வீ­தத்­தில் இருந்து, 1.75 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது. மேலும், இந்த ஆண்­டில், மூன்று முறை வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட உள்­ள­தாக தக­வல் வெளி­யா­னது.
இருப்­பி­னும், வட்டி விகித கூட்­டத்­திற்கு பின் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டி­யில், கொள்கை முடி­வு­கள் தளர்த்­தப்­பட்­ட­தாக அறி­விப்பு வெளி­யா­னது. இத­னால், அமெ­ரிக்க டாலர் மதிப்பு சரிவு நிகழ்ந்­தது. அதன் தொடர்ச்­சி­யாக, தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகிய­வற்­றின் விலை அதி­க­ரித்­தது. தற்­போது 1,365 டாலர் என்­பது நல்ல ரெசிஸ்­டென்ஸ் ஆகும்.
தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 30,510 30,350 31,000 31,210காம்எக்ஸ் (டாலர்) 1,342 1,330 1,355 1,365

வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) (ஆகஸ்ட்) 38,500 38,050 39,150 39,700காம்எக்ஸ் (டாலர்) 16.30 16.05 16.75 16.95


செம்பு:
சர்­வ­தேச பங்­குச் சந்­தை­கள் சரி­வும், அதன் தாக்­க­மும், செம்பு விலை­யில் சரிவை ஏற்­ப­டுத்­தின. தொடர்ந்து ஆறு வாரங்­க­ளாக செம்பு, சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கிறது. லண்டன் பொருள் வாணிப சந்­தை­யில், செம்பு இருப்பு அளவு, கடந்த வெள்­ளி­யன்று வந்த விப­ரப்படி, 20,125 டன் அதி­க­ரித்­து உள்ளது.
மேலும், சீனா­வின் பொருள் வாணிப சந்­தை­யி­லும் இருப்பு அளவு, 7.8 சத­வீ­தம் உயர்ந்து, 1,86,312 டன் என்ற அளவை எட்டியது. இவ்­வாறு உயர்ந்து வரும் இருப்பு அளவு, சந்­தை­யில் செம்­பின் தேவை குறைவாக இருப்­பதை உணர்த்­து­கிறது. இத­னால் விலை சரிய ஆரம்பித்­தது.கடந்த வாரத்­தில் ஏற்­பட்ட பங்­குச் சந்தை சரிவு கார­ண­மா­க­வும், தேவை­யில் ஏற்­பட்ட தொய்­வும், அனைத்து தொழிற்­சாலை மூலப்­பொ­ருள் கனி­மங்­களில் சரிவை ஏற்­ப­டுத்­தி­யது. ஈயம், மற்ற கனி­மங்­களை விட, அதி­க­ள­வில், 7 சத­வீ­தம் அள­வுக்கு, சரிவை கடந்த வாரம் சந்­தித்­தது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 431.00 425.00 440.00 445.80

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)