பதிவு நீக்கிய நிறுவனங்களின் கேட்பாரற்ற ரூ.37,500 கோடிபதிவு நீக்கிய நிறுவனங்களின் கேட்பாரற்ற ரூ.37,500 கோடி ... ஏப்­ரல் மாதத்­தில் தொழில் பயிற்சி முகாம்­கள் ஏப்­ரல் மாதத்­தில் தொழில் பயிற்சி முகாம்­கள் ...
‘மத்திய அரசுடன் மோதல் இல்லை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2018
04:08

புதுடில்லி : “மத்­திய அர­சுக்­கும், என் தலை­மை­யி­லான வங்­கி­கள் வாரி­யத்­திற்­கும் இடையே எவ்­வித மோத­லும் இல்லை,” என, வினோத் ராய் தெரி­வித்­துள்­ளார்.

சமீ­பத்­தில், ‘பொதுத் துறை வங்­கி­களின் சீர்­தி­ருத்­தம் தொடர்­பாக, வங்­கி­கள் வாரி­யம் அளித்த பரிந்­து­ரை­களை, நிதி­ய­மைச்­ச­கம் மதிக்­க­வில்லை’ என, வினோத் ராய் கூறி­ய­தாக, செய்தி வெளி­யா­னது. அத­னால், மத்­திய அர­சுக்­கும், வங்­கி­கள் வாரி­யத்­திற்­கும் பனிப்­போர் மூண்­டுள்­ள­தாக, கரு­தப்­பட்­டது.

வழிகாட்டுதல்:
இந்­நி­லை­யில், வினோத் ராய், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது: மத்­திய அர­சுக்­கும், வங்­கி­கள் வாரி­யத்­திற்­கும் இடையே எந்­த­வித மோத­லும் இல்லை. இன்­னும் சொல்­வ­தா­னால், மத்­திய அரசு, வங்­கி­கள் வாரி­யத்­திற்கு முழு­மை­யான ஆத­ரவை நல்­கி­யுள்­ளது. நான் அவ்­வப்­போது, மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண்­ ஜெட்­லியை சந்­தித்து, அவ­ரது வழி­காட்­டு­தலை பெற்று வந்­துஉள்­ளேன்.

வங்­கித்துறை தொடர்­பாக, பிர­த­மர் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தி­லும் நான் பங்­கேற்­றுள்­ளேன். மத்­திய அரசு, எந்த வகை­யி­லும், வங்கி தலைமை அதி­கா­ரி­கள் நிய­ம­னத்­தில் தலை­யிட்­ட­தில்லை. அவர்­களை தேர்வு செய்ய, எனக்கு முழு சுதந்­தி­ரம் அளிக்­கப்­பட்­டது. வங்­கி­கள் வாரி­யம் அமைக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் ஆகின்றன. இந்த காலத்­தில், ரிசர்வ் வங்­கி­யின் ஆத­ர­வும், அரசு துறை செய­லர்­களின் ஒத்­து­ழைப்­பும் பரி­பூ­ர­ண­மாக, வாரி­யத்­திற்கு கிடைத்­துள்­ளது.

பொதுத் துறை­யைச் சேர்ந்த இரண்டு பெரிய வங்­கி­களின் தலை­வர்­கள் நிய­ம­னத்­தில் கூட, நிதி­ய­மைச்­சர் முழு நம்­பிக்­கை­யு­டன் எனக்கு தேர்வு செய்­யும் பொறுப்பை அளித்­தார். அதில் எவ்­வி­தத்­தி­லும், அர­சி­யல் தலை­யீடும் நிக­ழ­வில்லை.

ஆவணங்கள்:
வங்­கி­கள் வாரி­யத்­தின் பணி, வரும், 31ம் தேதி­யு­டன் முடி­வுக்கு வரு­கிறது. இரண்டு ஆண்­டு­க­ளாக, வாரி­யம் மேற்­கொண்ட பணி­கள், வங்­கித் துறை­யில் மேற்­கொள்ள வேண்­டிய சீர்­தி­ருத்­தங்­கள் மற்­றும் பரிந்­து­ரை­கள் அனைத்­தும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு, தொகுக்­கப்­பட்­டுள்­ளது. அவை, புதிய வங்கி வாரி­யம் அமைக்­கப்­ப­டும்­பட்­சத்­தில், வங்­கித் துறையை மேம்­ப­டுத்த உத­வும், அடிப்­படை ஆவ­ணங்­க­ளாக விளங்­கும். இந்த பரிந்­து­ரை­கள், வலை­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்ளன. நான், 10 நாட்­க­ளாக, சிங்­கப்­பூ­ரில் இருந்­த­தால், முழு­மை­யான ஆவ­ணங்­களை பார்க்க முடி­ய­வில்லை.

வலை­த­ளத்­தில், வங்­கி­கள் வாரி­யத்­தின் முழு செயல்­பா­டு­களின் தொகுப்பு வெளி­யி­டப்­பட்ட போது, 2017, ஜூலை­யில், நிதி­ய­மைச்­ச­ருக்கு எழு­திய கடி­தம் தொடர்­பான சில தலைப்­பு­கள், தவ­றாக புரிந்து கொள்­ளப்­பட்­டுள்ளன. அத­னால், எனக்­கும் மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­திற்­கும் மோதல் என, தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அந்த கடி­தம் எழு­தப்­பட்ட பிற­கும், நான் பல முறை நிதி­ய­மைச்­சர் மற்­றும் நிதிச் சேவை­கள் செய­லரை சந்­தித்து, கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருக்­கி­றேன். பொதுத் துறை வங்­கி­களை சீர­மைக்க, பி.ஜே.நாயக் குழு அளித்த பரிந்­து­ரைப்­படி, வங்­கி­கள் வாரி­யம் அமைக்­கப்­பட்­டது. இது, பொதுத் துறை வங்­கிளை புன­ர­மைப்­ப­தற்­கான புரட்­சி­க­ர­மான நட­வ­டிக்­கை­யா­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)