ராயல் சுந்தரம் நிறுவன பங்குகளை வாங்குகிறது, ‘கோல்டுமேன் சாச்ஸ்’ராயல் சுந்தரம் நிறுவன பங்குகளை வாங்குகிறது, ‘கோல்டுமேன் சாச்ஸ்’ ... ‘தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி வங்கிகளை தனியார்மயமாக்கி விடலாம்’ ‘தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி வங்கிகளை தனியார்மயமாக்கி விடலாம்’ ...
வேலை வாய்ப்பை இழக்கும் நகை தொழிலாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2018
00:48

‘ஆன்­லைன்’ வர்த்­த­கம் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளால், தமி­ழக நகை தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரம் கடு­மை­யாக பாதித்­துள்­ள­தாக, தங்­கம், வெள்ளி நகை தொழி­லா­ளர் சங்­கத்­தி­னர் கூறு­கின்­ற­னர்.

ஆன்­லைன் வர்த்­த­கம், வட­மா­நி­லத்­த­வர்­களின் வருகை போன்­ற­வற்­றால் தங்­கம், வெள்ளி தொழி­லில் கடும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. இது குறித்து, பூங்­கா­ந­கர் தங்­கம், வெள்ளி நகை தொழி­லா­ளர் சங்­கத் தலை­வர் டி.ஜெய­கோபி கூறி­ய­தா­வது: சென்­னை­யில், 20 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட குடும்­பத்­தி­னர் இந்த தங்­கம், வெள்ளி நகை தொழி­லில் ஈடு­பட்­டு உள்­ள­னர்.

தங்­கம், வெள்ளி விலை­யில் சீரான போக்கு இல்­லா­த­தா­லும், மக்­க­ளி­டையே பணப்­பு­ழக்­கம் போதிய அளவு இல்­லா­த­தா­லும், எங்­க­ளைப் போன்ற நகை தொழி­லா­ளர்­க­ளுக்கு, மாதத்­தில், 15 நாள் மட்­டுமே வேலை கிடைக்­கிறது. அது­வும் திரு­மண சீசன் என்­றால் மட்­டுமே வேலை இருக்­கிறது. மேலும், ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­தால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளால், பல தொழி­லா­ளர்­க­ளுக்கு போதிய வேலை கிடைக்­க­வில்லை. இத­னால் தொழிலை விட்டே அவர்­கள் செல்­லும் நிலை ஏற்­பட்­டடு உள்­ளது.

சமீ­ப­கா­ல­மாக இத்­தொ­ழிலை நம்பி வட­மா­நி­லத்­தி­லி­ருந்து வரு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. நம் தொழி­லா­ளர்­க­ளுக்கு, ஒரு நாளுக்கு, 700 ரூபாய் வரை சம்­ப­ளம் தர வேண்­டும். ஆனால், வட­மா­நி­லத்­த­வர்­க­ளுக்கு, 300 ரூபாய் கொடுத்­தாலே போதும் என, வாங்­கிக் கொள்­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு தங்­கும் இடத்­து­டன் சாப்­பா­டும் ஏற்­பாடு செய்து கொடுத்து விடு­வ­தால், வட­மா­நி­லத்­த­வர்­கள், அவர்­களை சார்ந்­த­வர்­க­ளி­டத்­தி­லேயே வேலைக்கு சேர்ந்து விடு­கின்­ற­னர்.

வட­மா­நி­லத்­த­வர்­கள் பேஷன் நகை­க­ளையே விரும்பி செய்­வர். அவர்­கள் செய்­யும் நகை குறிப்­பிட்ட நாளுக்கு மட்­டுமே தாக்­குப்­பி­டிக்­கும். ஆனால் நம்­மூர் தொழி­லா­ளர்­கள் செய்­வது போல், உறு­தி­யான, அழ­கிய வேலைப்­பா­டு­டன் கூடிய நகை­களை அவர்­கள் செய்­வ­தில்லை. இப்­போ­தைக்கு பேஷன் நகை­க­ளுக்கு தான் மவுசு இருக்­கிறது. இதன் கார­ண­மாக தமி­ழக நகை தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை கிடைப்­பது குறைந்து வரு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.
– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)