‘தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி வங்கிகளை தனியார்மயமாக்கி விடலாம்’‘தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி வங்கிகளை தனியார்மயமாக்கி விடலாம்’ ... செண்­பக மணம் வீசும் மலர் சந்தை செண்­பக மணம் வீசும் மலர் சந்தை ...
உணவு தொழிலை வகைப்படுத்த புதிய முறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2018
00:51

புது­டில்லி : உண­வுத் தொழி­லில் ஈடு­பட்டு வரும் நிறு­வ­னங்­களின் வகையை, சரக்கு மற்­றும் சேவை வரிக்கு ஏற்ப, மாற்றி அமைக்­கப்­பட இருப்­ப­தாக, உணவு மற்­றும் பாது­காப்பு தர ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் உணவு மற்­றும் பாது­காப்பு தர ஆணை­யத்­தின் தலைமை செயல் அதி­காரி, பவன் குமார் அகர்­வால் கூறி­ய­தா­வது:உண­வுத் தொழில் நடத்­து­வ­தற்கு பெற வேண்­டிய உரி­மம் மற்­றும் பதி­வு­களை மாற்றி அமைத்து வரு­கி­றோம். இதில், ஜி.எஸ்.டி., மற்­றும் மிகச் சிறு, சிறு மற்­றும் குறுந்­தொ­ழில்­களின் வரை­மு­றை­க­ளுக்கு ஏற்ப, பல்­வேறு வித­மாக உண­வுத் தொழில்­களை வகைப்­ப­டுத்த இருக்­கி­றோம்.

மின்னனு முறை:
இதன்­படி, தற்­போ­துள்ள, 17 உண­வுத் தொழில் வகை­கள், 8 ஆகக் குறைக்­கப்­படும். உதா­ர­ண­மாக, தற்­போது ஆண்டு விற்­று­மு­தல், 12 லட்­சம் ரூபாய் வரை­யுள்ள உண­வுத் தொழில் பிரிவு, 20 லட்­சம் ரூபாய் பிரி­வுக்கு மாற்­றி­ய­மைக்­கப்­படும். அதோடு, உண­வுத் தொழி­லில் ஈடு­படும் நிறு­வ­னங்­கள், முறை­யான பாது­காப்பு நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­று­கின்­ற­னவா என்­ப­தைக் கண்­கா­ணிக்க உள்­ளோம். இதற்கு தேவை­யான மின்­னணு முறையை, ஆணை­யம் உரு­வாக்கி வரு­கிறது. அடுத்த, 23 மாதங்­களில் இந்த முறை பயன்­பாட்­டுக்கு தயா­ரா­கி­வி­டும்.

புதிய உண­வுப் பொருட்­கள் தயா­ரிப்­புக்கு உரி­மம் கோரும்­போது, அந்­தந்த நிறு­வ­னங்­களின் முந்­தைய சிறப்­பான செயல்­பா­டு­க­ளைப் பார்த்து முடி­வெ­டுப்­பது, பய­னு­டை­ய­தாக இருக்­கும். ஆனால், தற்­போது அத்­த­கைய வசதி ஓரி­டத்­தில் சேர்ந்­தாற்­போல் இல்லை. மேலும், உரி­மம் வழங்­கும்­போது, தர நிர்­ண­யம் மற்­றும் மேலட்­டை­யில் அதன் விப­ரங்­களை முறை­யாக அச்­ச­டிப்­பட்­டி­ருக்­கின்­ற­னவா என்­ப­தை­யும் ஆணை­யம் சரி­பார்க்­கும். எதிர்­கா­லத்­தில் இந்த வரை­ய­றை­களும், உரி­மம் பெறும் படி­வத்­தில் சேர்க்­கப்­படும்.

உண­வ­கங்­களில் சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­த­வும் ஆணை­யம் முடிவு செய்­தி­ருக்­கிறது. இதற்­காக ஒரு தரக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளோம்.அதன் அடிப்­ப­டை­யில், உண­வ­கங்­களை தரம் பிரிப்­ப­தற்கு, தகு­தி­யான தரப் பரி­சோ­தனை அமைப்பை, விரை­வில் நிய­ம­னம் செய்ய இருக்­கி­றோம்.உல­கெங்­கும், இதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு என்றே, ஒழுங்­கு­முறை அதி­கா­ரி­கள் இருக்­கின்­ற­னர். எங்­க­ளி­டம் இருக்­கும் பணி­யா­ளர்­கள் மிக­வும் குறைவு. அத­னால் தான், இதை வெளி நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்கி விட­லாம் என, முயற்சி மேற்­கொண்­டி­ருக்­கி­றோம்.

பயிற்சி கட்டாயம்:
ஆரம்­பத்­தில், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நக­ரங்­களில் உள்ள உண­வ­கங்­களின் சுகா­தார தரத்தை, அந்­தந்த மாநி­லங்­களே தர­வ­ரிசை செய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படும். தரப்­ப­டுத்­து­த­லில் ஓர­ள­வுக்கு பயிற்சி கிடைத்­த­வு­டன், இந்த நெறி­மு­றை­கள் கட்­டா­ய­மாக்­கப்­படும். அதே­போல் உண­வுத் தொழி­லில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், தங்­க­ளு­டைய தரத்தை தாங்­களே நெறி­மு­றைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்­ப­தில், ஆணை­யம் உறு­தி­யாக இருக்­கிறது.

அதற்­காக, ஒவ்­வொரு நிறு­வ­ன­மும், ஒவ்­வொரு உண­வுப் பொரு­ளை­யும் சோதனை செய்ய, திறன் பெற்ற உண­வுப் பரி­சோ­த­கர் அல்­லது அதி­கா­ரியை நிய­மிப்­ப­தற்கு பயிற்சி அளித்து வரு­கிறது. இது­வரை, 800 பயிற்சி வகுப்­பு­கள் நடத்­தப்­பட்டு, 18,000 பணி­யா­ளர்­கள் பயிற்சி பெற்­றுள்­ள­னர். அடுத்த ஓரிரு ஆண்­டு­கள் இத்­த­கைய பயிற்சி கட்­டா­ய­மாக்­கப்­படும். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)