‘முதலீட்டாளர்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்’‘முதலீட்டாளர்கள் நேரடியாக புகார் அளிக்கலாம்’ ... குறை­யும் மல்லி விலை குறை­யும் மல்லி விலை ...
‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் ஏற்றுமதி விர்ர்ர்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2018
02:09

புதுடில்லி : சில ஆண்­டு­க­ளாக, வேளாண் துறை ஏற்­று­மதி மந்­த­மாக உள்ள போதி­லும், ‘ஆர்­கா­னிக்’ வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி மட்­டும், ஓசை­யின்றி சிறப்­பான வளர்ச்சி கண்டு வரு­கிறது.

ரசா­யன உரங்­கள், நச்­சுத் தன்­மை­யுள்ள பூச்­சிக் கொல்லி மருந்­து­கள் போன்­ற­வற்றை பயன்­ப­டுத்­தா­மல், இயற்கை விவ­சா­யத்­தில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­பவை, ‘ஆர்­கா­னிக்’ வேளாண் பொருட்­கள் எனப்­ப­டு­கின்றன.

வளர்ச்சி:
உல­கெங்­கி­லும், இயற்கை வேளாண் முறை­யில் உற்­பத்தி செய்­யப்­படும் உண­வுப் பொருட்­க­ளுக்கு வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த, 2015 – -16ம் நிதி­யாண்டு முதல், நாட்­டின் ஒட்­டு­மொத்த வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில், தேக்க நிலை காணப்­ப­டு­கிறது. இத்­து­றை­யின் ஏற்­று­மதி, 2016- – 17ம் நிதி­யாண்­டில், மதிப்­பின் அடிப்­ப­டை­யில், 1 சத­வீ­தம் மட்­டும் உயர்ந்து, 107.43 கோடி டால­ரில் இருந்து, 108.42 கோடி டால­ராக இருந்­தது. ஆனால், இயற்கை முறை­யில் உற்­பத்­தி­யா­கும் வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி, பல மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

மதிப்­பீட்டு நிதி­யாண்­டு­களில், இப்­பி­ரி­வின் ஏற்­று­மதி, 25 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 1.97 கோடி டால­ரில் இருந்து, 2.47 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. மொத்த வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில், இயற்கை விவ­சாய பொருட்­களின் பங்கு, 3 சத­வீ­தத்­திற்­கும் குறை­வாக உள்ள போதி­லும், அதன் ஏற்­று­மதி, சிறப்­பான வளர்ச்சி கண்டு வரு­கிறது.

விற்பனை:
கடந்த பத்­தாண்­டு­களில், இயற்கை வேளாண் உண­வுப் பொருட்­கள் ஏற்­று­மதி, 500 கோடி ரூபா­யில் இருந்து, 2,500 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதில், சோயா, பருத்தி ஆகி­ய­வற்­றின் பங்கு, 50 சத­வீ­த­மா­க­வும், மசாலா பொருட்­கள், தேயிலை, பருப்பு, கம்பு உள்­ளிட்ட சிறு­தா­னி­யங்­கள் எஞ்­சிய பங்­கை­யும் கொண்­டுள்ளன.

இது குறித்து, கூர்­கா­னைச் சேர்ந்த, ‘ஜஸ்ட் ஆர்­கா­னிக்’ நிறு­வ­னர் பங்­கஜ் அகர்­வால் கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில் இயற்கை முறை­யில் விளை­விக்­கப்­படும் உண­வுப் பொருட்­க­ளுக்கு, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­கள், கனடா ஆகி­யவை முக்­கிய சந்­தை­க­ளாக உள்ளன. ஆனால், இயற்கை உண­வுப் பொருட்­க­ளுக்கு உள்­நாட்­டி­லும், வெளி­நா­டு­க­ளி­லும் பல்­வேறு அமைப்­பு­களின் தரச் சான்­றி­தழ் பெறு­வது தான், பிரச்­னை­யாக உள்­ளது.

சமீ­பத்­தில், உணவு பாது­காப்பு மற்­றும் தர ஆணை­யம், அதன் தரச் சான்று இல்­லாத எந்த உண­வுப் பொருட்­க­ளை­யும், இயற்கை வேளாண் பொருள் என்ற பிரி­வின் கீழ் விற்­பனை செய்­யக் கூடாது என, உத்­த­ர­விட்­டுள்­ளது. சிறிய விவ­சா­யி­க­ளுக்கு, இந்த விதி­மு­றை­யில் விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும், உணவு பாது­காப்பு மற்­றும் தர ஆணை­யத்­தின் உத்­த­ரவு, பிற்­போக்­கா­னது. இயற்கை வேளாண் பொருட்­கள் துறை­யின் வளர்ச்­சிக்கு, எளிய நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

முதன் முதலாக:
முதன் முத­லாக, சிக்­கிம் மாநி­லம், 2016ல், 100 சத­வீ­தம் இயற்கை விவ­சா­யத்­திற்கு மாறி­யது. இதை­ய­டுத்து, கேரளா, மிசோ­ரம், கோவா, ராஜஸ்­தான், மேகா­லயா ஆகி­யவை, முழு­மை­யாக இயற்கை விவ­சா­யத்­திற்கு மாற உள்­ள­தாக அறி­வித்­துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)