‘ரெப்போ’ வட்டி விகிதம் மாறாது யு.பி.எஸ்., நிறுவனம் கணிப்பு‘ரெப்போ’ வட்டி விகிதம் மாறாது யு.பி.எஸ்., நிறுவனம் கணிப்பு ... சந்­தே­கத்­துக்கு இடம் கொடா­தீர்! சந்­தே­கத்­துக்கு இடம் கொடா­தீர்! ...
வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‘ஸ்டார்ட் அப்’ நிதியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2018
05:06

புதுடில்லி: மத்­திய அரசு, வேளாண் துறை­யில் இளம் தொழில் முனை­வோரை ஈர்த்து, விளை­பொ­ருட்­கள் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, ‘ஸ்டார்ட் அப்’ நிதி­யம் அமைக்க திட்­ட­மிட்­டுள்­ளது.வலை­த­ளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­ப­டு­பவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் எனப்­ப­டு­கின்றன. இதற்கு, ‘பிளிப்­கார்ட், ஸ்விகி, ஓ.எல்.எக்ஸ்’ போன்ற நிறு­வ­னங்­களை உதா­ர­ண­மாக கூற­லாம்.
இது போன்று, புதிய சிந்­தனை மற்­றும் நவீன தொழில்­நுட்ப பின்பு­லத்­தில் துவக்­கப்­படும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்­தியா’ என்ற திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கிறது.இத்­திட்­டத்­தில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு ஏரா­ள­மான சலு­கை­கள் வழங்­கப்­ப­டு­கின்றன.இந்­நி­லை­யில், வேளாண் துறை ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம், பிரத்­யே­க­மாக, வரைவு கொள்­கையை உரு­வாக்­கி­யுள்­ளது.இக்­கொள்­கை­யின்­படி, வேளாண் துறை­யில் இளம் தொழில்­மு­னை­வோரை ஈர்த்து, விளை­பொ­ருட்­கள் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, ஸ்டார்ட் அப் நிதி­யம் ஏற்­ப­டுத்­தப்­பட உள்­ளது.ஒரு­வர், வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி தொடர்­பான ஸ்டார்ட் அப் நிறு­வ­னத்தை துவக்க விரும்­பி­னால், அதற்­கான நிதி­யு­தவி, ஆலோ­சனை ஆகி­ய­வற்றை, அரசு அமைக்க திட்­ட­மிட்­டுள்ள, ஸ்டார்ட் அப் நிதி­யம் வழங்­கும்.இதற்கு, தொழில் துவங்க விரும்­பு­வோர், ஸ்டார்ட் அப் நிறு­வ­னத்­தின் கொள்கை, வடி­வ­மைப்பு மற்­றும் திட்ட அறிக்­கையை, நிதி­யத்­திற்கு வழங்க வேண்­டும்.வேளாண் ஏற்­று­மதி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறு­வன திட்­டங்­கள் அனைத்­தை­யும், நிதி­யம் பரி­சீ­லிக்­கும். அதில், தொழில்­மு­னை­வோர் அளித்த திட்­டம் மூலம் வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும் என தெரிந்­தால், நிதி­யு­தவி வழங்­கப்­படும்.இது­போல, வேளாண் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­தும் பல்­வேறு அம்­சங்­கள், மத்­திய அர­சின், வேளாண் ஏற்­று­மதி மேம்­பாட்­டிற்­கான வரைவு கொள்­கை­யில் இடம் பெற்­றுள்ளன.மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம், மக்­களின் கருத்­துக் கேட்­புக்­காக, வேளாண் ஏற்­று­மதி மேம்­பாட்டு வரைவு கொள்­கையை வலை­த­ளத்­தில் வெளி­யிட்­டுள்­ளது. இந்த வரைவு கொள்கை குறித்து, 5ம் தேதிக்­குள் கருத்­துக்­களை பதிவு செய்­ய­லாம் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
வேளாண் துறை­யில், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி­யு­தவி அளிக்க, ஏரா­ள­மான தனி­யார் நிதி நிறு­வ­னங்­கள் உள்ளன. எனி­னும், இளம் தொழில்­மு­னை­வோரை அதிக அள­வில் ஈர்க்­க­வும், வேளாண் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­த­வும், ஸ்டார்ட் அப் நிதி­யம் ஏற்­ப­டுத்த உள்­ளது வர­வேற்­கத்­தக்­கது. இத­னால், வேளாண் ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும் என்­ப­து­டன், விளை­பொ­ருட்­க­ளுக்கு உரிய விலையை விவ­சா­யி­கள் பெற முடி­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எங்­கள் நிறு­வ­னம், தேநீர் வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளது. இதற்­காக நாங்­கள், தேயிலை, இஞ்சி, துளசி, ஏலக்­காய் ஆகி­ய­வற்றை, நேர­டி­யாக விவ­சா­யி­க­ளி­டம் இருந்து கொள்­மு­தல் செய்­கி­றோம்
நிதின் சலுஜா, நிறுவனர், ‘சாயோஸ்’ – ஸ்டார்ட் அப் நிறுவனம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)