பதிவு செய்த நாள்
02 ஏப்2018
00:22

தேசிய சேமிப்பு சான்றிதழ், பி.பி.எப்., உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.
ஏப்ரல்- – ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், நிதி அமைச்சகம், 2018ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டின், நான்காம் காலாண்டில் இருந்த வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதம், 4 சதவீதமாக நீடிக்கிறது. பி.பி.எப்., மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் வட்டி விகிதம், 7.6 சதவீதமாக இருக்கிறது. செல்வ மகள் சேமிப்பு
திட்டம், 8.1 சதவீத வட்டியைக் கொண்டிருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|