பதிவு செய்த நாள்
02 ஏப்2018
00:25

கிரெடிட் கார்டு பயன்பாடு எளிதானது. அவசர தேவைகளின் போது, கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பாக நிறுவனங்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடி புள்ளிகளையும் அளிக்கின்றன. எனினும், கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனம் தேவை. உங்களுக்கு கிரெடிட் கார்டு தேவையா என, தீர்மானிக்கும் முன், இந்த அம்சங்களை நினைவில் கொள்ளுங்கள்.
வட்டி விகிதம்: இப்போது செலவு செய்து, பின்னர் அதற்கான தொகையை செலுத்தலாம் எனும் அடிப்படையில்,
கிரெடிட் கார்டு பயன்பாடு அமைகிறது. பல நேரங்களில் இந்த அம்சம்
தேவையில்லாத செலவுகளில் ஈடுபட வைக்கும். விரும்பிய நேரத்தில்
பொருட்களை வாங்க விரும்பினாலும், கிரெடிட் கார்டு தொகைக்கான வட்டி
விகிதம், அதிகமானது. இது, செலவை அதிகமாக்கி, சுமையைக் கூட்டலாம்.
எகிறும் பட்ஜெட்: ரொக்கத்தை பயன்படுத்துவதைவிட, கிரெடிட் கார்ட் மூலம் அதிகம் செலவு செய்யநேரலாம். பொருட்களை வாங்க விரும்பியவுடன், கார்டை தேய்த்து பணம் செலுத்துவது எளிதாக அமைகிறது.
ஒரு மாதம் முழுவதும், பணம் செலுத்த வேண்டாம் என்ற எண்ணம், அதிக
பொருட்களை வாங்கத் துாண்டலாம். இது நிச்சயம், மாத பட்ஜெட்டை
பதம் பார்க்கும்.
கடன் வலை: கிரெடிட் கார்டு பயன்பாடு எளிதானது என்பதை மட்டும் பார்க்க கூடாது. அதன் பின்னே, மறைந்திருக்கும் கட்டணங்கள் மற்றும் அபராதங்களையும் கவனிக்க வேண்டும். தொகையை, உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால், வட்டி அதிகமாகும். அதன் பிறகும்
தவறினால், அபராதம் விதிக்கப்படும். இப்படி, கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட்டால், ஒரு கட்டத்தில், கடன் வலையில் சிக்க நேரலாம்.
கடன்
தகுதி பாதிப்பு: கிரெடிட் கார்டு பயன்பாடு வரைமுறை இல்லாமல் அமையும்
போது, கடன் சுமை வாட்டுவதோடு, கடன் தகுதியை தீர்மானிக்க உதவும்
கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படலாம். கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாமல், நிலுவையில் வைத்திருப்பது, கடன் தகுதி மதிப்பெண்ணை குறைக்கும். ஆனால், அதே நேரத்தில், கிரெடிட் கார்டை சிறப்பாக நிர்வகித்து வந்தால், கடன் தகுதி மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.
மன அழுத்தம்: கையில் வைத்திருக்கும் ரொக்கத்தைப் பயன்படுத்தி செலவு செய்தால், அதற்கேற்ப திட்டமிடலாம். செலுத்த வேண்டிய பாக்கித்தொகை, தாமதம், அபராதம் போன்றவை பற்றி எல்லாம் கணக்குப்போட்டு
கவலைப்பட வேண்டாம். ஆனால், கிரெடிட் கார்டு பயன்பாட்டில்,
கட்டுப்பாடு இல்லாவிட்டால், இந்த கவலைகள் எல்லாம் உண்டாகி, மன அழுத்தம் ஏற்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|