'டிஜிட்டலுக்கு மாறுவதில் தொழிலதிபர்களுக்கு ஆர்வமில்லை''டிஜிட்டலுக்கு மாறுவதில் தொழிலதிபர்களுக்கு ஆர்வமில்லை' ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ...
‘ஆர்ஜியோ’வால் நுகர்வோருக்கு ரூ.65,000 கோடி மிச்சம் ஐ.எப்.சி., ஆய்வறிக்கை தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2018
01:00

புதுடில்லி:‘இந்­திய தொலை­தொ­டர்பு சேவை­யில், ‘ரிலை­யன்ஸ் ஜியோ’ நிறு­வ­னம் நுழைந்­த­தால், நுகர்­வோ­ருக்கு, ஆண்­டுக்கு, 65 ஆயி­ரம் கோடி ரூபாய் மிச்­சம் ஆகி உள்­ளது’ என, ஐ.எப்.சி., நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அமெ­ரிக்­கா­வின் ஹார்­வர்டு வணிக கல்வி மையத்­தைச் சேர்ந்த, ஐ.எஸ்.சி., அமைப்­பின் ஓர் அங்­க­ மாக, ஐ.எப்.சி., உள்­ளது. கூர்­கா­னைச் சேர்ந்த இந்­நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:
உயர்ந்தது
முகேஷ் அம்­பா­னி­யின், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம், வர்த்­தக ரீதி­யி­லான தொலை­தொ­டர்பு சேவையை, 2016, செப்., 5ல் துவக்­கி­யது. குறிப்­பிட்ட காலத்­திற்கு இல­வச சேவையை வழங்­கிய இந்­நி­று­வ­னம், அதன் பின், கட்­ட­ணச் சேவைக்கு மாறியது.எனி­னும், இந்­நி­று­வனம் அறி­மு­கப்­ப­டுத்­திய, வாழ்­நாள் முழு­வ­தும் இல­வச அழைப்பு; ‘டேட்டா’ எனப்­படும் தரவு பரி­வர்த்­த­னைக்கு மிகக் குறை­வான கட்­ட­ணம் ஆகி­ய­வற்­றால், குறு­கிய காலத்­தில் கோடிக்­க­ணக்­கான சந்­தா­தா­ரர்­களை ஈர்த்­தது.
அது­வரை, தொலை­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­கள், 1 ஜி.பி., தரவு பரி­வர்த்­த­னைக்கு, சரா­ச­ரியாக, 152 ரூபாய் வசூ­லித்து வந்­தன. இது, ஆர்­ஜியோ வரு­கைக்கு பின், 10 ரூபா­யாக குறைந்­தது.இத­னால், மொபைல் போனில் இணை­யத்தை பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை வெகு­வாக உயர்ந்தது.
தரவு பரி­வர்த்­தனை கட்­ட­ணம் குறைந்­த­தால், சமூ­கத்­தின் பல­த­ரப்­பட்ட மக்­களும், முதன் முறை­யாக மொபைல் போனில் இணைய வச­தியை பயன்­ப­டுத்த துவங்­கி­னர்.இந்த வகை­யில், ‘ஆர்­ஜியோ’ வரு­கை­யால், மிகக் குறை­வாக கணக்­கிட்­டால் கூட, நுகர்­வோ­ருக்கு, ஆண்­டுக்கு, சரா­சரி, 1,000 கோடி டாலர், அதா­வது, 65 ஆயி­ரம் கோடி ரூபாய் மிச்­ச­மாகி இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
பயன்
மொபைல் போனில் இணைய பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ள­தால், தொலை­தொ­டர்பு துறை மட்­டு­மின்றி, இதர துறை­க­ளுக்­கும் பல்­வேறு வகைகளில் பயன் கிட்­டி­யுள்­ளது.இது, தனி­ந­பர் அடிப்­படை­யி­லான மொத்த உள்­நாட்டு உற்­பத்திவளர்ச்­சியை, 5.65 சதவீதம் உயர்த்­தும் என, மதிப்­பிடப்­பட்­டுள்­ளது.மேலும், ஒன்­றரை ஆண்­டு­களில், மொபைல் போனில், ‘ஆப்’களை பதி­வி­றக்­கம் செய்­வ­தில், சீனா­வுக்கு அடுத்த இடத்தை, இந்­தியா பிடித்­துள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
நிர்ப்பந்தம்
தொலை­தொ­டர்பு சேவை நிறு­வ­னங்­க­ளின் வரு­வா­யில், 75 சத­வீ­தம், அழைப்­பு­கள் மூலம் கிடைத்து வந்­தது. இந்­நி­லை­யில், ‘வாழ்­நாள் முழு­வ­தும் இல­வச அழைப்பு’ என, ஆர்­ஜியோ அறி­வித்­த­தால், தொலை­தொ­டர்பு சேவை துறை, அடி­யோடு மாறி­யது. கடும் போட்­டி­யால், இதர நிறு­வ­னங்­களும் கட்­ட­ணங்­களை குறைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.
முதலிடம்
இந்­தி­யா­வில், மொபைல் போனில், இணை­யம் வாயி­லான தரவு பரி­வர்த்­தனை, மாதம், 20 கோடி ஜி.பி., அள­விற்கு இருந்­தது. இது, ஆர்­ஜியோ சேவையை துவக்­கிய பின், 100 கோடி ஜி.பி., ஆக உயர்ந்­துள்­ளது.இத­னால், உல­கி­லேயே மொபைல் போனில் அதி­க­மாக தரவு பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­ளும் நாடு­களில், இந்­தியா முத­லி­டத்தை பிடித்­துள்­ளது.

கடந்த, 2017 இறுதி நில­வ­ரப்­படி, ஒரு மாதத்­தில், சரா­ச­ரி­யாக, 10 ஜி.பி., தரவு பரி­வர்த்­தனை; 700 நிமிட அழைப்பு; 134 மணி நேர வீடி­யோவை ஆர்­ஜியோ சந்­தா­தா­ரர்­கள் பயன்­ப­டுத்­து­வ­தாக கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)