பதிவு செய்த நாள்
11 ஏப்2018
00:41

சென்னை:பாமாயில், ரீபைண்ட் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரத் துவங்கியுள்ளது.சென்னை, கொத்தவால்சாவடி மொத்த விலை எண்ணெய் விற்பனை கடைகளில், இம்மாதம் முதல், எண்ணெய் வகைகளின் விலை உயரத் துவங்கியுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:இறக்குமதி வரி கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளதால், 1 கிலோவுக்கு, 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. 65 ரூபாய்க்கு விற்ற, ஒரு லிட்டர் பாமாயில், தற்போது, 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது.தேங்காய் எண்ணெய் தரத்திற்கு ஏற்ப, 1 லிட்டர் 200 – 250 வரை விற்பனையாகிறது. கொப்பரை உற்பத்தி குறைவால், தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘நிலக்கடலை விலை, 1 கிலோ, 60 ரூபாய்க்கு கிடைத்தது.தற்போது அதே கடலை, 70 – 75 ரூபாய்க்கு விற்கின்றனர். இதனால், கடலை எண்ணெய் உற்பத்தி விலை கூடுதலாகி உள்ளது. தரமான கடலை எண்ணெய், 220 – 240 ரூபாய் வரை விற்கிறோம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|