பதிவு செய்த நாள்
11 ஏப்2018
00:43

புதுடில்லி:முதலீட்டாளர்கள், தொடர்ந்து, ஐந்து நிதியாண்டுகளாக, ‘கோல்டு இ.டி.எப்.,’ திட்டங்களில் இருந்து, அதிக அளவில் வெளியேறி வருகின்றனர்.
தங்கத்தின் மீது முதலீடு செய்யும் இந்த திட்டங்களில், வங்கி சேமிப்பை விட குறைவான வருவாய் கிடைப்பது தான், இதற்கு காரணம்.மியூச்சுவல் பண்டு துறையில், 2006 – 07ம் நிதியாண்டு முதல், 14 கோல்டு இ.டி.எப்., திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றில், 2012 வரை, மூன்று இலக்கத்தில், கோடிக்கணக்கான தொகை முதலீடு செய்யப்பட்டது. ஆனால், 2013 பிப்ரவரி முதல், முதலீடுகள் குறையத் துவங்கி, ஒற்றை இலக்கத்திற்கும், சில மாதங்களில், அதுவும்கூட இல்லாமல் உள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது நிதியாண்டாக, 2017 – 18ல், கோல்டு இ.டி.எப்., திட்ட முதலீடுகளில் இருந்து, 835 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.கடந்த, 2016 – 17, 2015 – 16, 2014 – 15, 2013 – 14ம் நிதியாண்டுகளில், முறையே, 775 கோடி, 903 கோடி, 1,475 கோடி மற்றும் 2,293 கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.கடந்த நிதியாண்டில், கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 4,806 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 5,480 கோடி ரூபாயாக இருந்தது.தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றை விட, அதிக வருவாய் கிடைப்பதால், பலர், பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|