பதிவு செய்த நாள்
11 ஏப்2018
00:47

புதுடில்லி:ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை, பொதுத் துறை நிறுவனமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கடந்த, 2013, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், ஜி.எஸ்.டி., வரி நடைமுறைகளை நிர்வகிக்க, ஜி.எஸ்.டி.என்., என்ற தனியார் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இதில், மத்திய அரசு, 49 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ், என்.எஸ்.இ., ஸ்ட்ரேடெஜிக் இன்வெஸ்ட்மென்ட், ஆகியவை, 51 சதவீத பங்கு மூலதனம் மேற்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு, ஜூலையில், ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்த பின், 1 கோடி நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் பதிவு செய்துள்ளன. இம்மாதம் முதல், ‘இ – வே’ பில் எனப்படும், மின்வழிச் சீட்டு நடைமுறையும் அறிமுகமாகியுள்ளது.பிரமாண்டமான வரி விதிப்பு முறையை நிர்வகிக்கும் ஓர் நிறுவனம், தனியாரிடம் இருப்பது பாதுகாப்பானது அல்ல என, மத்திய அரசு கருதுகிறது.
தகவல் திருட்டு உள்ளிட்ட இடர்ப்பாடுகள் உள்ளதால், ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை, அரசு நிறுவனமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, மத்திய நிதித் துறை செயலர் ஹஷ்முக் ஆதியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|