பதிவு செய்த நாள்
11 ஏப்2018
00:48

புதுடில்லி:இந்தியாவில், ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில், வேலைவாய்ப்பு அதிகரித்து வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.வேலைவாய்ப்பு வலைதள நிறுவனமான, ‘இன்டீட்’ வெளியிட்டுள்ள அறிக்கை:நாட்டில், பிளாக்செயின் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகம் பெறுவதில், பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.இந்நகரம், பிளாக்செயின் சார்ந்த வேலைவாய்ப்பில், 36 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. அடுத்து, மும்பை, ஐதராபாத், புனே, சென்னை ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்த பிரிவில், டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தை காட்டிலும், தென்னிந்தியாவில் உள்ள, தொழில்நுட்ப மையங்களான, பெங்களூரு, ஐதராபாத் நகரங்கள், வேலைவாய்ப்பு பெறுவதில் முன்னணியில் உள்ளன.சர்வதேச சந்தையில், பிளாக்செயின் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மதிப்பு, 2022ல், 7,700 கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, பிளாக்செயின் தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு, எந்தெந்த துறைகளில் பயன்படுத்தலாம் என, ஆராய்ந்து வருகிறது. அதனால், இப்பிரிவில் எதிர்காலத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைகள், பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தான் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|