பதிவு செய்த நாள்
11 ஏப்2018
00:50

புதுடில்லி:'வீடியோகான்' விவகாரம் காரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, சந்தா கோச்சார், பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த, 3,250 கோடி கடனுக்கு, சந்தா கோச்சார் குடும்பத்தினர், கைமாறு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து, சந்தா கோச்சார் கணவர், தீபக் கோச்சார், மைத்துனர் ராஜீவ் கோச்சார் ஆகியோரிடம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்தா கோச்சார் பதவி விலக கோரும் தீர்மானத்தை நிறைவேற்றவும், புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யவும், வங்கி இயக்குனர் குழு, ஓரிரு நாட்களில் கூட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, சந்தா கோச்சார் பதவி விலகி, தற்காலிக தலைமை செயல் அதிகாரிக்கு வழி விடுவார் என, தெரிகிறது.எனினும், சந்தா கோச்சார் பதவியில் தொடர்வதும் விலகுவதும், ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவில் தான் உள்ளது. இதில், நிதியமைச்சகம் தலையிட முடியாது என, வங்கி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|