பதிவு செய்த நாள்
12 ஏப்2018
00:37

புதுடில்லி:சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் விதித்த, 136 கோடி ரூபாய் அபராதத்தை எதிர்த்து, கூகுள் நிறுவனம், நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், மனு தாக்கல் செய்துள்ளது.
கூகுள் வலைதளத்தில், ஒருசார்பு நிலை கடைபிடிக்கப்படுவதாகவும், தகவல்களை தேடும்போது, குறிப்பிட்ட விளம்பரங்கள் திணிக்கப்படுவதாகவும், 2012ல் பல்வேறு புகார்கள் எழுந்தன.இந்த புகார்களை விசாரித்த, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த பிப்ரவரியில், ‘கூகுள் நிறுவனம், தேடல் பொறி பிரிவில், உலகளவில் முதலிடத்தில் உள்ளதால், தனக்கு சாதகமானவற்றை, வலைதள பார்வையாளர்களிடம் திணிக்கிறது’ எனக் கூறி, குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது.
மேலும், ‘கூகுளின் செயல், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் கண்டனம் தெரிவித்தது.அத்துடன், பாரபட்ச வர்த்தகத்திற்காக, கூகுள் நிறுவனத்திற்கு, 136 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கூகுள் நிறுவனம், நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|